Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வெரி ஸ்லோ... ஆனாலும் அரைசதம்...இன்னாப்பா இப்படி பண்றீங்களேப்பா!

பிரிஸ்பேன் :இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 4வது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.

இந்த போட்டியில் சுப்மன் கில், புஜாரா, பந்த் ஆகியோர் அரைசதங்களை கடந்து சிறப்பாக பேட்டிங்கை வெளிப்படுத்தினர்.

ஆயினும் இந்த போட்டியில் மிகவும் மெதுவான அரைசதத்தை சத்தீஸ்வர் புஜாரா பதிவு செய்துள்ளார்.

வெற்றிக்கு காரணமான வீரர்கள்

வெற்றிக்கு காரணமான வீரர்கள்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 4வது போட்டியின் வெற்றியின்மூலம் இந்த டெஸ்ட் தொடரை 2க்கு 1 என்ற கணக்கில் இந்திய அணி தட்டி சென்றுள்ளது. இன்றைய போட்டியில் சுப்மன் கில், ரிஷப் பந்த் மற்றும் புஜாரா ஆகியோர் அரைசதங்களை கடந்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணங்களாக அமைந்தனர்.

196 பந்துகள்... 56 ரன்கள்

196 பந்துகள்... 56 ரன்கள்

இந்த போட்டியில் 56 ரன்களை அடித்துள்ளார் சத்தீஸ்வர் புஜாரா. அவரது இந்த பங்களிப்பு இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தாலும் அவர் இந்த 56 ரன்களை 196 பந்துகளில் அடித்துள்ளார். இதன்மூலம் அவரது டெஸ்ட் கேரியரில் மிகவும் மெதுவான அரைசதமாக இன்றைய போட்டியின் அரைசதம் அமைந்துள்ளது.

மெதுவான அரைசதங்கள்

மெதுவான அரைசதங்கள்

முன்னதாக இதே தொடரில் கடந்த போட்டியின்போது, அரைசதம் அடித்த புஜாரா, 170 பந்துகளில் அரைசதத்தை அடித்துள்ளார். அதே இன்னிங்சில் அடித்த மற்றொரு அரைசதத்தை 174 பந்துகளில் அடித்தார். கடந்த 2018 தொடரின் ஒரு போட்டியின் போது 173 பந்துகளை பயன்படுத்தி அரைசதத்தை அடித்துள்ளார்.

எதிரணியை சோதிக்கும் ஆட்டம்

எதிரணியை சோதிக்கும் ஆட்டம்

டெஸ்ட் போட்டிகளில் நிலையான ஆட்டக்காரராக கருதப்படுகிறார் புஜாரா. ஆயினும் எதிரணியின் பொறுமையை சோதிக்கும் வகையில் இவ்வளவு அதிகமான பந்துகளை பயன்படுத்தி அவர் ரன்களை அடித்து வருகிறார். அதிலும் தற்போது நடந்து முடிந்துள்ள இந்த தொடரின் 3 போட்டிகளில் அவர் இதை நடைமுறை படுத்தியுள்ளார்.

Story first published: Tuesday, January 19, 2021, 18:27 [IST]
Other articles published on Jan 19, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+