Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஸ்மித், வார்னர் இருக்கறது பெரிய சவால்தான்.. வெற்றி எளிதா கிடைச்சுடுமா என்ன... புஜாரா விளக்கம்

சிட்னி : இந்தியாவிற்கு எதிரான ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் உள்ளிட்டவர்கள் இடம்பெற்றிருப்பது மிகப்பெரிய சவால் என்று சத்தீஸ்வர் புஜாரா தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய தொடரில் பங்கேற்பதற்காக சிட்னியில் குவாரன்டைன் மற்றும் பயிற்சியில் ஈடுபட்டுள்ள அவர் வெற்றி என்பது எளிதாக கிடைத்து விடாது என்றும் மேலும் கூறியுள்ளார்.

கடந்த 2018 -19 தொடரில் இந்தியா, ஆஸ்திரேலிய அணியை 2க்கு 1 என்ற கணக்கில் அவர்களது சொந்த மண்ணில் வெற்றி கொண்டது.

வெற்றிக்கு உதவிய புஜாரா

வெற்றிக்கு உதவிய புஜாரா

கடந்த 2018 -19 தொடரில் இந்தியா ஆஸ்திரேலியாவை சொந்த மண்ணில் 2க்கு 1 என்ற கணக்கில் வெற்றி கொண்டது. 71 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா இந்த வெற்றியை சாத்தியப்படுத்தியது. அந்த தொடரில் புஜாரா 500 ரன்களுக்கு மேல் குவித்திருந்தார். இதில் 3 சதங்களும் அடங்கும்.

வெற்றி எளிதானது அல்ல

வெற்றி எளிதானது அல்ல

தற்போதைய ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரிலும் புஜாரா இடம்பெற்றுள்ளார். இந்நிலையில், கடந்த தொடரை காட்டிலும் தற்போது ஆஸ்திரேலிய பேட்டிங் ஆர்டர் மிகவும் வலிமையாக உள்ளதாக புஜாரா கூறியுள்ளார். ஆனால் வெற்றி எளிதாக கிடைத்து விடாது என்றும் மற்ற நாடுகளில் விளையாடும்போது நம்முடைய திறனை மேலும் பலப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

வெற்றியை பெற்று தருவார்கள்

வெற்றியை பெற்று தருவார்கள்

கடந்த தொடரை போலவே ஜஸ்பிரீத் பும்ரா, இஷாந்த் சர்மா மற்றும் முகமது ஷமி உள்ளிட்ட பௌலர்கள் தங்களது சிறப்பான திறமையை வெளிப்படுத்தி இந்திய அணிக்கு மீண்டும் வெற்றியை பெற்று தருவார்கள் என்றும் நம்பிக்கை தெவித்துள்ளார். கடந்த தொடரில் வெற்றியை என்ஜாய் செய்த அவர்களுக்கு அதை மீண்டும் கொண்டுவரவும் தெரியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சவாலானது -புஜாரா

சவாலானது -புஜாரா

கடந்த தொடரில் செயல்பட்டதை போலவே இந்த தொடரிலும் செயல்பட்டால் வெற்றி நம் வசப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் வெளிநாட்டில் முதல் முறையாக பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடுவது சவாலானது என்றும் புஜாரா தெரிவித்துள்ளார். சரியான முறையில் பயிற்சி மேற்கொண்டால் வெற்றி சாத்தியம் என்றும் அவர் கூறியுள்ளார்.

Story first published: Monday, November 16, 2020, 17:29 [IST]
Other articles published on Nov 16, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+