
புஜாராவின் அதிரடி
புஜாரா தலைமையிலான சகெக்ஸ் அணி, மிட்லெசெக்ஸ் அணிக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் மோதியது. இதில் சிறப்பாக விளையாடிய அவர் இரட்டை சதம் அடித்து அனைவருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளார். மொத்தமாக 368 பந்துகளை சந்தித்த புஜாரா 19 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 231 ரன்களை விளாசினார்.

புது சாதனை
இதன் மூலம் பெரும் சாதனையை அவர் படைத்துள்ளார். அதாவது கிரிக்கெட்டின் பிறப்பிடமாக கருதப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் இரட்டை சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை புஜாரா பெற்றார். இதே போல கடந்த 118 ஆண்டு கவுண்டி கிரிக்கெட் வரலாற்றில் ஒரே சீசனில் அதிக இரட்டை சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார்.

118 ஆண்டு வரலாறு
நடப்பு சீசனில் இதுவரை 10 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள புஜாரா, இதுவரை 3 இரட்டை சதங்களை ( 201*, 203, 200*) அடித்துள்ளார். இதே போல இந்த சீசனில் அவர் அடிக்கும் 4வது 150+ ஸ்கோர் இதுவாகும். இதனையடுத்து புஜாராவுக்கு லார்ட்ஸ் மைதானத்தில் ரசிகர்கள் எழுந்து நின்று கைத்தட்டி பாராட்டினர்.

புதிய பிரச்சினை சிக்கல்
இந்திய அணியில் ஃபார்ம் அவுட்டாகி தவித்து வந்த சட்டீஸ்வர் புஜாராவுக்கு கவுண்டி கிரிக்கெட்டில் சிறப்பான புத்துணர்ச்சி கிடைத்துள்ளது. இதனையடுத்து அவருக்கு இனி இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இந்தாண்டு இனி டெஸ்ட் போட்டியே கிடையாது என தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











