For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

புஜாரா ஓய்வு- 206 முதல் 56 ரன்கள் வரை.. தலைசிறந்த டாப் 5 டெஸ்ட் இன்னிங்ஸ்?

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் புஜாரா தன்னுடைய 37 ஆவது வயதில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்திய அணிக்காக 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அவர் 7195 ரன்கள் அடித்து இருக்கின்றார்.

இந்திய டெஸ்ட் அணியின் நவீன காலத்து பெருஞ்சவர் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் புஜாரா தன் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் அடித்த சிறந்த இன்னிங்ஸ்களை தற்போது பார்க்கலாம்.2012 ஆம் ஆண்டு அகமதாபாத் டெஸ்ட் போட்டியில் புஜாரா 206 ரன்கள் அடித்தார். இது அவருடைய ஆறாவது டெஸ்ட் போட்டி ஆகும்.

Cheteshwar Pujara Top 5 Knocks in Test cricket

ஜேம்ஸ் ஆண்டர்சன் கிராம் ஸ்வான் போன்ற பவுலர்களுக்கு எதிராக புஜாரா சுமார் 500 நிமிடங்கள் களத்தில் நின்று விளையாடினார். 389 பந்துகளை எதிர்கொண்ட அவர் 21 பவுண்டரிகளை அடித்தார்.இதன் மூலம் இந்திய அணி முதல் இன்னிங்சில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 521 ரன்கள் குவித்தது.

இதை அடுத்து இங்கிலாந்து அணி பதிலுக்கு 191 ரன்களில் முதல் இன்னிங்சில் ஆட்டம் இழக்க ஃபாலோ ஆன் பெற்று இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 406 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 77 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் களமிறங்கிய இந்திய அணியில் புஜாரா மீண்டும் 41 ரன்கள் எடுக்க இந்தியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பது அடிலெய்ட் டெஸ்டில் புஜாரா 2018 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 123 ரன்கள் எடுத்தார். முதல் இன்னிங்சில் இந்திய அணி 41 ரன்களுக்கு நான்கு விக்கெட் என்ற ஸ்கோரில் தடுமாறிய நிலையில் புஜாரா அபாரமாக விளையாடி 123 ரன்களை விளாசினார்.இதன் மூலம் இந்திய அணி வெற்றி பெற்றது.

2013 ஆம் ஆண்டு புஜாரா தென்னாபிரிக்காவுக்கு எதிராக ஜோகனஸ்பர்கில் 153 ரன்கள் குவித்தார். இந்த டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 280 ரன்கள் எடுக்க தென்னாப்பிரிக்க அணி 244 ரன்கள் ஆட்டம் இழந்தது. இதை அடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் புஜாரா 270 பந்துகளை எதிர் கொண்டு 153 ரன்கள் சேர்த்தார். இதனால் இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 421 ரன்கள் குவித்தது. இதை அடுத்து 458 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்க அணி களம் இறங்கியது.

கடைசி நாள் வரை போராடி ஏழு விக்கெட் இழப்பிற்கு 450 ரன்கள் எடுக்க போட்டி சமநிலையில் முடிவடைந்தது. இந்த பட்டியலில் நான்காம் இடத்தில் 2018 ஆம் ஆண்டு சவுத் ஆம்டனில் நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டி தான். இதில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 246 ரன்களில் ஆட்டமிழக்க,புஜாரா தனித்து நின்று 132 ரன்கள் எடுத்தார். இதில் 16 பவுண்டரிகள் அடங்கும்.

இதன் மூலம் இந்திய அணி 273 ரன்கள் எடுத்தது. 2வது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 271 ரன்கள் எடுக்க, கடைசி இன்னிங்ஸில் 245 ரன்கள் என்ற இலக்கை இந்தியா துரத்தியது. அப்போது 184 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்திருப்பது 2021 ஆம் ஆண்டு பிரிஸ்பேனில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் புஜாரா 211 பந்துகளை எதிர்கொண்ட புஜாரா வெறும் 56 ரன்கள் தான் எடுத்திருந்தார்.

புஜாராவின் இந்த இன்னிங்ஸ் மூலம் ஆஸ்திரேலியா வீரர்கள் சோர்வடைந்தனர். இதனை பயன்படுத்திக்கொண்டு பண்ட், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் கீழ் வரிசையில் அபாரமாக விளையாடி இந்திய அணியை 328 ரன்கள் என்ற இலக்கை 7 விக்கெட்டுகளை இழந்து எட்டியது. இதன் மூலம் 1986 ஆம் ஆண்டுக்கு பிறகு ஆஸ்திரேலியா வீழ்த்திய ஒரே அணி என்று பெருமையை இந்தியா பெற்றது. இந்த இன்னிங்சில் புஜாரா 11 முறை பந்தால் அடி வாங்கினார்.

Story first published: Sunday, August 24, 2025, 19:41 [IST]
Other articles published on Aug 24, 2025
English summary
Cheteshwar Pujara Top 5 Knocks in Test cricket
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+