Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய கிரிக்கெட்டில் யாருமே செய்யாத பல சாதனைகள்.. இனி புஜாரா போல் ஒரு வீரரை பார்க்க முடியாது

ராஜ்காட்: சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து இந்திய அணியின் நட்சத்திர வீரர் புஜாரா தனது 37 வது வயதில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்திய அணிக்காக 103 டெஸ்ட் போட்டிகள் விளையாடி 7195 ரன்கள் அடித்திருக்கின்றார்.

இதில் அவருடைய சராசரி 43 என்று அளவில் இருக்கிறது. புஜாரா டெஸ்ட் கிரிக்கெட்டில் மொத்தமாக 19 சதம், 35 அரை சதம் அடித்திருக்கின்றார். இதேபோன்று ஒட்டுமொத்த முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் புஜாரா 278 போட்டிகளில் விளையாடி மொத்தமாக 21301 ரன்களை அடித்திருக்கின்றார்.

Cheteshwar Pujara

இதில் 66 சதமும், 81 அரை சதமும் அடங்கும். இதில் அவருடைய சராசரி 51 என்ற அளவில் இருக்கின்றது. ஐபிஎல் தொடரில் புஜாரா ஆர்சிபி பஞ்சாப் மற்றும் சிஎஸ்கே அணிக்காக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். இதில் சிஎஸ்கே அணியில் அவர் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.ஐபிஎல் தொடரில் 22 இன்னிங்சில் 390 ரன்கள் அடித்துள்ளார்.

இந்த நிலையில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் புஜாரா நம்பர் மூன்றாவது வீரராக கோலோச்சி பல சாதனைகளை படைத்தார். புஜாரா 2023 ஆம் ஆண்டுக்கு பிறகு எந்தவித கிரிக்கெட் போட்டிகளிலும் இந்தியாவுக்காக விளையாடவில்லை. ஆனால் அவருடைய இடத்திற்கு பல வீரர்கள் வந்து சென்றாலும், நிலையான ஒரு வீரரை இந்தியா இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

அதுதான் புஜாராவில் கெத்தாகும். இதுவரை புஜாரா டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆறு முறை ஆட்டநாயகன் விருதையும், இரண்டு முறை தொடர் நாயகன் விருதையும் வாங்கி இருக்கின்றார். புஜாரா அண்டர் 19 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் 2006 ஆம் ஆண்டு தொடர் நாயகன் விருதையும் வென்றுள்ளார்.

இதேபோன்று 2013 ஆம் ஆண்டு ஐசிசி யின் வளர்ந்து வரும் வீரர்களுக்கான விருதையும் புஜாரா வென்றுள்ளார். 2018 ஆம் ஆண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் தொடர் நாயகன் விருது வென்றார். அது மட்டும் இல்லாமல் இந்திய கிரிக்கெட் வரலாற்றிலேயே ஒரு இன்னிங்ஸில் 500 பந்துகளை எதிர்கொண்ட ஒரே வீரர் என்ற சாதனையும் அவர் படைத்திருக்கிறார்.

கவாஸ்கர், சச்சின், டிராவிட் கூட இந்த சாதனையை படைத்ததில்லை. அது மட்டும் இல்லாமல் தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து,, ஆஸ்திரேலியா போன்ற மண்ணில் அதிக டெஸ்ட் போட்டிகளில் வென்ற இந்திய வீரர் என்ற பெருமையும் புஜாராவுக்கு இருக்கின்றது. ஒரு பார்டர் கவாஸ்கர் தொடரில் மட்டும் புஜாரா 1258 பந்துகளை எதிர் கொண்டிருக்கின்றார்.இதேபோன்று கடந்த 40 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் ஒரு டெஸ்ட் போட்டியில் ஐந்து நாட்களிலும் பேட்டிங் செய்த வீரர் என்ற பெருமையை புஜாரா பெற்றிருக்கின்றார்.

Story first published: Sunday, August 24, 2025, 12:10 [IST]
Other articles published on Aug 24, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+