For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

புதிய மைல்கல்லை எட்ட காத்திருக்கும் புஜாரா.. 7வது இந்திய வீரர் என்ற பெருமை..நாளைய டெஸ்டில் வாய்ப்பு

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் புஜாரா தற்போது புதிய மைல்கல் ஒன்றை எட்ட உள்ளார்.

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் புஜாரா முதல் இன்னிங்ஸில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 203 பந்துகளை எதிர் கொண்டு 90 ரன்களை குவித்தார்.

எனினும் இரண்டாவது இன்னிங்ஸில் தன்னுடைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய புஜாரா 130 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார்.இதில் 13 பவுண்டர்களும் அடங்கும்.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

தற்போது இரண்டாவது டெஸ்டில் பூஜாராவை நம்பி தான் இந்திய அணியின் பேட்டிங் இருக்கிறது. முதல் டெஸ்டில் புஜாரா, சுப்மான்கில், ஸ்ரேயாஸ், அஸ்வின் ஆகியோர் இந்திய அணியை காப்பாற்றினர். இதனால் இரண்டாவது டெஸ்டிலும் அவர்கள் பெரிய இன்னிங்ஸ் விளையாடுவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.இந்த நிலையில் புஜாரா ஒரு புதிய மைல் கல்லை எட்ட இருக்கிறார்.

7 ஆயிரம் ரன்கள்

7 ஆயிரம் ரன்கள்

அதாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் இன்னும் அவர் 16 ரன்களை சேர்த்தால் ஏழாயிரம் ரன்கள் அடித்த வீரர் என்று பெருமையை பெறுவார். இதன் மூலம் சச்சின், டிராவிட், கவாஸ்கர், லக்ஷ்மன், சேவாக், கோலி,கங்குலி ஆகியோருக்கு பிறகு 7000 ரன்கள் அடித்த ஏழாவது இந்திய வீரர் என்ற பெருமையை பூஜாரா பெறுவார். இதேபோன்று விராட் கோலி முதல் டெஸ்டில் சோபிக்கத் தவறியதால் இரண்டாவது டெஸ்டில் பார்முக்கு திரும்ப கடுமையாக போராடி வருகிறார்.

கோலி பயிற்சி

கோலி பயிற்சி

இதற்காக டாக்காவில் வலை பயிற்சியில் மும்முரமாக விராட் கோலி ஈடுபட்டு வருகிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர், விராட் கோலி எப்போதும் போல் கடின பயிற்சி மேற்கொண்டு வருகிறார். அவர் நல்ல பார்மில் இருக்கிறார். நிச்சயம் இரண்டாவது டெஸ்டில் ரன் அடிப்பார் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

ஃபார்ம்க்கு வருவார்களா?

ஃபார்ம்க்கு வருவார்களா?

வரும் பிப்ரவரி மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் நடைபெற உள்ள நிலையில் அதற்கு முன்பாக விராட் கோலி பெரிய இன்னிங்ஸ் விளையாடி பார்க்க திரும்ப வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இதேபோன்று கேப்டன் கே எல் ராகுல் தன்னுடைய திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். எனினும் கேஎல் ராகுலுக்கு காயம் ஏற்பட்டிருப்பதால் அவர் நாளைய டெஸ்டில் பங்கேற்பது சந்தேகமாகியுள்ளது. இதனால் புஜாரா இந்திய அணி தலைமை தாங்க அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, December 21, 2022, 18:48 [IST]
Other articles published on Dec 21, 2022
English summary
cheteshwara Pujara is all set to reach milestone in test cricket
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+