Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்னைக் கட்டிக்கோயேன்.. மெடல் வழங்கும் மேடையில் புரபோஸ் செய்த சீன நீச்சல் வீரர்!

ரியோ டி ஜெனீரோ: சீனாவைச் சேர்ந்த நீச்சல் வீரர் ஒருவர், சக நாட்டு நீச்சல் வீராங்கனையிடம் தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு பதக்கம் வழங்கும் நிகழ்ச்சியின்போது புரபோஸ் செய்து கலகலப்பை ஏற்படுத்தினார்.

ரியோ ஒலிம்பிக் போட்டியில் விளையாட்டு தவிர வேறு சில களேபரங்களும் அரங்கேறி கலகலப்பை ஏற்படுத்தி வருகின்றன. சமீபத்தில் பிரேசிலைச் சேர்ந்த ஒரு ஓரினச்சேர்க்கை ஜோடி தங்களது காதலை மைதானத்தில் வைத்து வெளிப்படையாக வெளிப்படுத்தியது.

இந்த நிலையில் சீனாவைச் சேர்ந்த நீச்சல் ஜோடி ஒன்று தங்களது காதலை மெடல் வழங்கும் நிகழ்ச்சியில் வெளிப்படுத்தி கலகலப்பாக்கியுள்ளது.

சீனத்து ஹீ ஷீ

சீனத்து ஹீ ஷீ

சீனாவைச் சேர்ந்த நீச்சல் (டைவிங்) வீராங்கனை ஹீ ஷீ. இவர் ஒலிம்பிக் போட்டியில் டைவிங் பிரிவில் கலந்து கொண்டு வெள்ளிப் பதக்கம் பெற்றார்.

குவின் காய்

குவின் காய்

போட்டி முடிந்ததும் பதக்கம் தரும் நிகழ்ச்சி நடைபெற்றது. பதக்கங்களை வீராங்கனைகள் பெற்றுக் கொண்டனர். அப்போது ஹீயை நோக்கி அவரது கதாலர் குவின் காய் ஓடி வந்தார்.

கல்யாணம் பண்ணிக்கோயேன்

அவரும் நீச்சல் வீரர்தான். ஹீ முன்பு ஒரு காலால் முழங்காலிட்டு தனது காதலைச் சொல்லி தன்னைக் கல்யாணம் செய்து கொள்ளுமாறு கோரினார்.

வெட்கம் வந்துச்சு பாருங்க

வெட்கம் வந்துச்சு பாருங்க

அதைப் பார்த்ததும் ஹீயின் முகம் அப்படியே செக்கச் சிவந்து போனது. சிரித்தபடி காயின் காதலையும், கல்யாணக் கோரிக்கையையும் அவர் ஏற்றார்.

காதலருக்கு வெண்கலம்

காதலருக்கு வெண்கலம்

கடந்த வாரம் நடந்த போட்டியில் காய் வெண்கலப் பதக்கம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் காதல் ஜோடியின் கல்யாண புரபோசல் ஒலிம்பிக் விழாவை மேலும் கலகலப்பாக்கி விட்டது.

சேட்டைக்காரர்

சேட்டைக்காரர்

இதுகுறித்து ஹீ கூறுகையில் மத்தியானத்துல இருந்தே இவர் ஒரு மாதிரியாகத்தான் இருந்தார். சிரித்தார், பாட்டுப் பாடினார். என்ன என்று கேட்டதற்குப் பதிலே சொல்லவில்லை. இப்போதுதான் எல்லாம் புரிந்தது என்று கூறிச் சிரித்தார் ஹீ.

6 வருடக் காதல்

6 வருடக் காதல்

காய்க்கு 30 வயதாகிறது. ஹீக்கு 25 வயதாகிறது. கடந்த 6 வருடமாக இருவரும் காதலித்து வருகின்றனராம். ஒலிம்பிக்கில் வைத்து தனது கல்யாணத் திட்டத்தைச் சொல்ல முடிவு செய்திருந்தாராம் காய்.

Story first published: Tuesday, August 16, 2016, 9:47 [IST]
Other articles published on Aug 16, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+