For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஸ்ட்ரோக்! கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ர்ன்ஸுக்கு இதய அறுவை சிகிச்சை - ஓடியாடிய கால்கள் செயலிழப்பு!

சிட்னி: இதய அறுவைச் சிகிச்சை மேற்கொண்ட கிறிஸ் கெய்ர்ன்ஸ் கால்கள் செயலிழந்துவிட்டதாக அவரது வழக்கறிஞர் ஆரோன் லாயட் தெரிவித்துள்ளார்.

நியூஸிலாந்து அணியில் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்து நிலைகளிலும் ஆதிக்கம் செலுத்தியவர் முன்னாள் ஆல்ரவுண்டர் கிறிஸ் கெய்ர்ன்ஸ்.

சில வாரங்களுக்கு முன்னர் ஏற்பட்ட திடீர் நெஞ்சு வலி காரணமாக கிறிஸ் கெய்ர்ன்ஸ் மயங்கி விழுந்தார். இதனையடுத்து அவருக்கு சமீபத்தில் இதயத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

 தீவிர சிகிச்சை

தீவிர சிகிச்சை

கான்பெர்ராவில் அவருக்கு ஒரு பெரிய இருதய அறுவை சிகிச்சை நடைபெற்றது. ஆனால், அவரது உடலில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாமல் இருந்தார். இதன் காரணமாக கவலையில் ஆழ்ந்திருந்த அவரது குடும்பத்தினர், மருத்துவர்களின் அறிவுரைப்படி, சிட்னியில் உள்ள செயின்ட் வின்சென்ட் மருத்துவமனைக்கு மாற்றினர். அதன் பிறகு சிட்னி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அங்கு அவருக்கு முன்னணி மருத்துவர்கள் வழங்கிய சிகிச்சையில் அவரது உடல்நிலை நிலைத் தன்மையுடன் இருந்தது. ஆனால் சீரியஸாக இருக்கிறார் என்றே கூறப்பட்டிருந்தது. இதனால் அவர் குணமடைய ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வந்தனர்.

 அடுத்தக்கட்ட நடவடிக்கை

அடுத்தக்கட்ட நடவடிக்கை

இது ஒருபுறம் இருக்க, கெய்ர்ன்ஸுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றதாக தகவல் வெளியானது. ஆனால் அதற்கு கெய்ர்ன்ஸின் வழக்கறிஞர் சமீபத்தில் மறுப்பு தெரிவித்திருந்தார். இதுகுறித்து அவர், "இந்த தகவல் உண்மை இல்லை. இதயத்தை மாற்ற வழிகள் உள்ளதாக தான் மருத்துவர்கள் கூறினார்கள். ஆனால் தற்போதைக்கு வழங்கப்பட்டுள்ள சிகிச்சைகள் வைத்து பொறுத்திருந்து பார்த்துவிட்டு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கலாம் எனக் கூறிவிட்டார்கள்" என விளக்கம் அளித்தார்.

 ஆபத்தான கட்டம்

ஆபத்தான கட்டம்

இந்நிலையில் சிட்னி மருத்துவமனை கடந்த சில நாள்களுக்கு முன்பு வெளியிட்ட அறிக்கையில், கிறிஸ் கெய்ர்ன்ஸ் உயிர்காக்கும் கருவிகளிலிருந்து விடுதலை பெற்றார் என்றும் உடல் நிலை தேறி தன் குடும்பத்தினருடம் கெய்ர்ன்ஸ் பேசினார் என்றும் குறிப்பிடப்பட்டது. இதனையடுத்து கிறிஸ் கெய்ர்ன்ஸ் ஆபத்தான கட்டத்தை தாண்டியுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 செயலிழந்த கால்கள்

செயலிழந்த கால்கள்

இந்நிலையில் அவரது வழக்கறிஞரான ஆரோன் லாயட் தற்போது அளித்துள்ள பேட்டியில், "உயிர் காக்கும் சிகிச்சையின்போது, முதுகு தண்டில் அவருக்கு ஸ்ட்ரோக் ஏற்பட்டது. இதனால் அவரது கால்கள் செயலிழந்துவிட்டது. இதன் காரணமாக ஆஸ்திரேலியாவில் இருக்கும் சிறந்த முதுக தண்டு சிகிச்சை மையத்தில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இப்போது அவரது உடல்நிலை சீராக இருக்கிறது. அவரின் உயிருக்கு எந்த பாதிப்பும் இல்லை. இந்த இக்கட்டான நேரத்தில் அவரது குடும்பத்துக்கு துணையாக இருந்த அனைவருக்கும் நன்றி" என தெரிவித்துள்ளார்.

 ரசிகர்கள் பிரார்த்தனை

ரசிகர்கள் பிரார்த்தனை

1989-2006 வரை நியூசிலாந்துக்காக 62 டெஸ்ட் மற்றும் 215 ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் கிறிஸ் கெய்ர்ன்ஸ் விளையாடி உள்ளார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 3320 ரன்கள் அடித்துள்ள அவர், 33 க்கு மேல் ஆவரேஜ் வைத்திருக்கிறார். அதுமட்டுமின்றி 218 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். ஒருநாள் போட்டிகளில், கெய்ர்ன்ஸ் 29.46 ஆவரேஜுடன் 4950 ரன்களையும், 201 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, அவர் ஸ்கை ஸ்போர்ட்ஸுக்கு வர்ணனையும் செய்து கொண்டிருந்தார். 200 விக்கெட்டுகள் மற்றும் 3000 ரன்கள் எடுத்த உலகின் எட்டு ஆல்-ரவுண்டர்களில் கெய்ர்ன்ஸும் ஒருவர். மீதமுள்ள ஏழு வீரர்களில், இயன் போத்தம் மற்றும் கபில்தேவ் (50 டெஸ்ட்) ஆகியோருக்குப் பிறகு, அதிவேகமாக.. அதாவது 58 டெஸ்ட் போட்டிகளில் இந்த 200 விக்கெட்ஸ் மற்றும் 3000 ரன்கள் எனும் இரட்டை சாதனையை கெய்ர்ன்ஸ் படைத்திருக்கிறார். எப்படியாவது மருத்துவமனையில் இருந்து அவர் முழுமையாக வீடு திரும்ப வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Story first published: Friday, August 27, 2021, 16:10 [IST]
Other articles published on Aug 27, 2021
English summary
Chris Cairns Suffers Paralysis In Legs - கிறிஸ் கெய்ர்ன்ஸ்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+