Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

களத்திற்கு உள்ளே அசுரன்.. வெளியே மன்மதன்..!! கிறிஸ் கெயிலின் லீலைகள்.. நடவடிக்கையிலிருந்து எஸ்கேப்

பார்பிடாஸ்: உலகின் அதிரடி கிரிக்கெட் வீரரான கிறிஸ் கெயில் இம்முறை ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை. இதனால், அவரது ஆட்டங்கள் மட்டுமல்ல, அவர் செய்யும் சேட்டைகளும் இம்முறை மிஸ் ஆகும்.

களத்தில் எதிரணி வீரர்களுக்கு அசுரன் போல் நிற்கும் கிறிஸ் கெயில், களத்திற்கு வெளியே ஒரு மன்மதன் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

கிறிஸ் கெயில் இம்முறை விளையாடாதது ரசிகர்களுக்கு வருத்தமாக இருந்தாலும், சில அணி நிர்வாகிகளுக்கு அப்பாடா இம்முறை எந்த பிரச்சினையும் வராது என்று நிம்மதி அடைந்துள்ளார்களாம். காரணம், நம்ம யூனிவர்சல் பாஸ் ரெக்கார்ட் அப்படி..

பெண்களுடன் கெயில்

பெண்களுடன் கெயில்

கிறிஸ் கெயிலுக்கு பார்டி பண்ணுவது என்றால் ரொம்ப பிடிக்கும். 2012ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற டி20 உலககோப்பையின் போது கிறிஸ் கெயில் அங்குள்ள ஹோட்டலில், 3 இளம் பெண்களுடன் அரைகுறை ஆடையுடன் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார். இதில் யார் மீது தவறு என்று தெரியவில்லை. கிறிஸ் கெயிலின் பாதுகாவலர்கள் அவரை மீட்டு, பெண்களை போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். ஆனால் எப்படியோ கெயில்,பெயர் சிக்கவில்லை.

கெயில் சில்மிஷம்

கெயில் சில்மிஷம்

2015அம் ஆண்டு உலககோப்பையின் போது வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அறைக்கு வந்த பெண் தெராபிஷ்ட் முன், கெயில், தனது டவலை அவிழ்த்து காட்டி பெரும் சர்ச்சையில் சிக்கினார். இதனையடுத்து அந்த பெண் நீதிமன்றத்தில் கெயில் மீது வழக்கு தொடர்ந்தார். அதன் பிறகு சமரசம் பேசி கெயில் அந்த வழக்கிலிருந்து வெளியேறினார். இதன் பிறகாவது கொஞ்சம் நிதானம் காட்டி இருக்க வேண்டும் அல்லவா? ஆனால் இல்லை.

வெட்கப்படாத பேபி

வெட்கப்படாத பேபி

2016ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய பிக் பேஷ் லீக் தொடரில் அதிரடியாக ஆடிவிட்டு வந்த கெயிலிடம் பெண் பத்திரிகையாளர் ஒருவர் பேட்டி எடுத்தார். அப்போது அவரிடம் கெயில் தகாத முறையில் பேசினார். வெட்கப்படாதீர், உங்களை அருகில் பார்ப்பதற்காக தான் இவ்வளவு ரன்கள் அடித்தேன் போன்ற வார்த்தைகளும் அதில் அடங்கும். இது சர்ச்சையான நிலையில் கெயிலுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

ஆடையில்லா நடனம்

ஆடையில்லா நடனம்

பார்டி ஒன்றின் போது கெயில், செர்லின் சோப்ரா என்ற பெண்ணிடம் , ஆடையை கலையும் படி மது போதையில் கூறியுள்ளார். பின்னர், அவரும் தனது ஆடையை கலைக்க முயன்றுள்ளார். நிலைமை மோசமாக சக வீரர்கள் கெயிலை அங்கிருந்து அப்புறப்படுத்தி அமைதிப்படுத்தினர். ஆடையில்லா நடனத்துக்காகவே தனது வீட்டில் ஒரு இடத்தை ஒதுக்கியுள்ளதாக கெயில், ஒரு கருத்தை பதிவிட்டு பின்னர் அதனை டெலிட் செய்தார்.

Story first published: Tuesday, March 1, 2022, 18:53 [IST]
Other articles published on Mar 1, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+