For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரோஹித் சர்மா, அப்ரிடி சாதனைகளை தூக்கி அடித்த சிக்ஸர் மன்னன் கிறிஸ் கெயில்!

பார்படாஸ் : வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி மன்னன் கிறிஸ் கெயில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் அதிரடியாக சதம் அடித்தார்.

இந்த போட்டியில் கெயில் 12 சிக்ஸர்கள் அடித்தார். இதன் மூலம் பல்வேறு சாதனைகளை கெயில் முறியடித்துள்ளார்.

கெயில் அதிரடி சதம்

கெயில் அதிரடி சதம்

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் நிதானமாக ஆடத் துவங்கிய கெயில் 54 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார். பின்னர், அதிரடிக்கு மாறிய கிறிஸ் கெயில் 12 சிக்ஸர்கள் மற்றும் 3 ஃபோர்கள் அடித்தார். முடிவில் 129 பந்துகளில் 135 ரன்கள் அடித்தார்.

அதிக சிக்ஸர்கள்

அதிக சிக்ஸர்கள்

இந்த போட்டியில் 12 சிக்ஸர்கள் அடித்த கெயில் மூன்று வித கிரிக்கெட் போட்டிகளிலும் சேர்த்து அதிக சிக்ஸர்கள் அடித்த பட்டியலில் முதல் இடத்தை பிடித்து அசத்தினார். அப்ரிடி 476 சிக்ஸர்கள் அடித்து முதல் இடத்தில் இருந்தார். அவரை பின் தள்ளி முதல் இடத்தை கெயில் பிடித்துள்ளார்.

அடுத்த இடங்களில் யார்?

அடுத்த இடங்களில் யார்?

தற்போது கெயில் 488 சிக்ஸர்களுடன் முதல் இடத்தில் இருக்கிறார். அப்ரிடி 476, மெக்குல்லம் 398, சனத் ஜெயசூரியா 352 அடுத்த மூன்று இடங்களில் இருக்கின்றனர். இந்தியாவின் ரோஹித் 349, தோனி 348 சிக்ஸர்களுடன் நான்கு மற்றும் ஐந்தாம் இடத்தில் இருக்கின்றனர்.

இன்னொரு சாதனை

இன்னொரு சாதனை

இந்த போட்டியில் 12 சிக்ஸர்கள் அடித்த கெயில் இதுவரை மூன்று ஒருநாள் போட்டிகளில் பத்துக்கும் மேற்பட்ட சிக்ஸர்கள் அடித்துள்ளார். இந்த சாதனையை செய்த முதல் வீரர் கெயில் தான் என்பது குறிப்பிடத்தக்கது. ரோஹித் சர்மாவையும் இந்த சாதனையில் முந்தியுள்ளார் கெயில்.

ரோஹித், குப்டில் சமன்

ரோஹித், குப்டில் சமன்

ஏபி டி வில்லியர்ஸ், மார்ட்டின் குப்டில், ரோஹித் சர்மா ஆகியோர் இரண்டு போட்டிகளில் பத்துக்கும் மேற்பட்ட சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் ஆவர். இவர்களில் குப்டில் மற்றும் ரோஹித் சர்மா தற்போதும் கிரிக்கெட் ஆடி வரும் வீரர்கள் என்பதால் கெயிலின் சாதனையை சமன் செய்யும் வாய்ப்பு உள்ளது.

இங்கிலாந்து வெற்றி

இங்கிலாந்து வெற்றி

கெயில் சூப்பர் சதம் அடித்து வெஸ்ட் இண்டீஸ் அணி 360 ரன்கள் குவிக்க உதவினார். எனினும், இங்கிலாந்து அணி இந்த இமாலய இலக்கை சேஸ் செய்து வெற்றி பெற்றது. கெயிலின் சதம் வீணானது.

Story first published: Thursday, February 21, 2019, 14:26 [IST]
Other articles published on Feb 21, 2019
English summary
Chris Gayle achieved several records in 1st ODI against England
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+