Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விக்கெட் கீப்பரான கிறிஸ் கெயில்... ஐபிஎல்லில் தொடரும் சேட்டை விளையாட்டு!

Recommended Video

கீப்பராக புதிய அவதாரம் எடுத்த கெயில்

ஹைதராபாத்: ஐபிஎல் டி-20 கிரி்ககெட் போட்டித் தொடரில் அதிரடி ஆட்டத்தின் மூலம் மிரள வைக்கும் கிறிஸ் கெயில், மிகவும் ஜாலியானவர். நேற்றைய ஆட்டத்தில் அவர் செய்த ஜாலியான காமெடியை பார்க்கும்போதே சிரிப்பை வரவழைக்கும்.

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் நடந்து வருகிறது. இதில் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் ஹைதராபாத்தில் நேற்று நடந்தது.

Chris Gayle became wicket keeper and made fun

முதலில் ஹைதராபாத் அணி பேட்டிங் செய்தது. ஆறாவது ஓவரின்போது, 3 விக்கெட் இழப்புக்கு 28 ரன்கள் என்ற நிலையில் ஹைதராபாத் விளையாடிக் கொண்டிருந்தது.

அப்போது பஞ்சாப் அணியின் ஷரண் வீசிய பந்து, விக்கெட் கீப்பர் லோகேஷ் ராகுலைத் தாண்டிச் சென்றது. கையில் இருந்த விக்கெட் கீப்பிங் கிளவுசை வீசிவிட்டு, பந்தைப் பிடிக்க லோகேஷ் ஓடினார்.

அந்த நேரத்தில் அருகில் இருந்த கிறிஸ் கெயில், கீப்பிங் கிளவுசை கையில் மாட்டிக் கொண்டு, நான் கீப்பிங் செய்கிறேன். பவுலிங் போடு என்று ஷரணிடம் கூறியுள்ளார்.

மேலும் ஸ்டம்பிங் செய்வது போலும் செய்து காண்பித்தார். திரும்பி வந்த லோகேஷிடம் சிரித்தபடியே கிளவுசை அளித்தார் கிறிஸ் கெயில்.கிறிஸ் கெயிலின் இந்த காமெடி காட்சி உள்ள வீடியோ தற்போடு டுவிட்டரில் மிகவும் பிரபலமாக உள்ளது.

Story first published: Friday, April 27, 2018, 16:26 [IST]
Other articles published on Apr 27, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+