For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

புதிய சாதனையை நிகழ்த்திய பஞ்சாப் சிங்கம்... 4500 ரன்களை கடந்த கிறிஸ் கெயில்

அபுதாபி : இந்த ஐபிஎல் தொடரில் நேற்றைய ஆர்சிபிக்கு எதிரான 31வது லீக் போட்டியில் தான் முதல் முறையாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ் கெயில் களமிறங்கினார்.

இந்த போட்டியில் அவர் அடித்த அரைசதம் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கியது.

இந்நிலையில் இந்த போட்டியில் விளையாடியதன்மூலம் ஐபிஎல்லில் 4500 ரன்களை பூர்த்தி செய்த 8வது வீரர் என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது.

திறமை குறையாத கெயில்

திறமை குறையாத கெயில்

ஐபிஎல்லில் ஆர்சிபி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் உள்ளிட்ட அணிகளுக்காக விளையாடியுள்ள கிறிஸ் கெயில் பல்வேறு சாதனைகளையும் தொடர்ந்து புரிந்து வருகிறார். வயதானாலும் ஸ்டைலும் திறமையும் கொஞ்சமும் குறையவில்லை என்ற வாக்கியத்திற்கு சொந்தக்காரராகவும் விளங்குகிறார் கெயில்.

125 ஐபிஎல் போட்டிகள்

125 ஐபிஎல் போட்டிகள்

இவர் கடந்த 2012ல் ஐபிஎல் சீசனில் 733 ரன்களை 160 ஸ்டிரைக் ரேட்டுடன் ஆர்சிபி அணிக்காக விளையாடி தந்துள்ளார். இதுவரை 125 போட்டிகளில் விளையாடியுள்ள கெயில், சராசரியாக 41.13ஐ பெற்றுள்ளார். கடந்த 2013 சீசனில் விளையாடி அவுட் ஆகாமல் 175 ரன்களை எடுத்தது மிகப்பெரிய ஸ்கோராக உள்ளது.

329 சிக்ஸ்கள்

329 சிக்ஸ்கள்

ஐபிஎல்லின் ஒரே இன்னிங்சில் 17 சிக்ஸ்களை அடித்தும் கெயில் சாதனை புரிந்துள்ளார். இந்நிலையில் அதிகபட்சமாக 329 சிக்ஸ்களை அடித்த வீரராக முதலிடத்தில் உள்ளார் கெயில். இவருக்கு அடுத்தபடியாக உள்ள டீ வில்லியர்ஸ் 225 சிக்ஸ்களை மட்டுமே அடித்துள்ளார்.

8வது வீரராக சாதனை

8வது வீரராக சாதனை

கடந்த 2018ல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி இவரை 2 கோடி ரூபாய் ஏலத்தில் எடுத்துள்ளது. இந்நிலையில், தற்போது ஐபிஎல்லில் 4500 ரன்களை கடந்துள்ள 8வது வீரர் என்ற பெருமை கிறிஸ் கெயிலுக்கு நேற்றைய ஆட்டத்தின்மூலம் கிடைத்துள்ளது. இந்த சீசனில் இவர் ஆடிய முதல் போட்டி நேற்றைய ஆர்சிபிக்கு எதிரான போட்டி.

3வது வெளிநாட்டு வீரர்

3வது வெளிநாட்டு வீரர்

முன்னதாக ஐபிஎல்லில் 4500 ரன்களை விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, ரோகித் சர்மா, டேவிட் வார்னர், ஷிகர் தவான், டீ வில்லியர்ஸ், எம்எஸ் தோனி ஆகியோர் கடந்துள்ள நிலையில், தற்போது 8வது வீரராக கிறிஸ் கெயில் இந்த சாதனையை படைத்துள்ளார். இந்த சாதனையை செய்துள்ள 3வது வெளிநாட்டு வீரர் கெயில் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, October 16, 2020, 20:36 [IST]
Other articles published on Oct 16, 2020
English summary
Gayle is third overseas player in IPL to reach 4,500 runs after David Warner and AB de Villiers
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+