Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கணக்கு வழக்கில்லாமல் சிக்ஸர்கள்.. ஒரே போட்டியில் வரிசை கட்டி சாதனை செய்த கிறிஸ் கெயில்!

செயின்ட் ஜார்ஜ் : வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயில் நீண்ட காலம் கழித்து ஒருநாள் போட்டிகளில் ஆடி வருகிறார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் அதிரடியாக ஆடி 162 ரன்கள் அடித்தார் கெயில். இந்த போட்டியில் சரமாரியாக சிக்ஸர்கள் பறக்க விட்ட கெயில் பல முக்கிய சாதனைகளை கடந்து அசத்தினார்.

உச்சகட்ட பார்மில் கிறிஸ் கெயில்

உச்சகட்ட பார்மில் கிறிஸ் கெயில்

இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் உச்சகட்ட பார்மில் இருக்கும் கிறிஸ் கெயில் இதுவரை மூன்று போட்டிகளில் 135, 50 மற்றும் 162 ரன்கள் அடித்துள்ளார். மூன்று போட்டிகளிலும் அதிரடியாக ஆடினார். இந்த தொடரில் மொத்தமாக 30 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.

புதிய மைல்கல்

புதிய மைல்கல்

நான்காவது போட்டியில் 97 பந்துகளில் 162 ரன்கள் அடித்தார் கெயில். இதில் 14 சிக்ஸர்கள் அடங்கும். இதன் மூலம், ஒருநாள் போட்டிகளில் மட்டும் 300க்கும் அதிகமான சிக்ஸர்கள் அடித்து புதிய மைல்கல்லை எட்டினார்.

அப்ரிடி, கெயில்

அப்ரிடி, கெயில்

இதுவரை ஒருநாள் போட்டிகளில் இரண்டு வீரர்கள் மட்டுமே 300க்கும் அதிகமாக சிக்ஸர்கள் அடித்துள்ளனர். ஒருவர் அப்ரிடி அவர் 351 சிக்ஸர்கள் அடித்துள்ளார். இரண்டாவதாக கிறிஸ் கெயில் 305 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.

500 சிக்ஸர்கள்

500 சிக்ஸர்கள்

மேலும், ஒட்டு மொத்த சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 500க்கும் மேற்பட்ட சிக்ஸர்கள் அடித்து மற்றொரு புதிய மைல்கல் சாதனை நிகழ்த்தியுள்ளார் கெயில். டி20 போட்டிகளில் 103, ஒருநாள் போட்டிகளில் 305 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் 98 சிக்ஸர்கள் அடித்துள்ளார் கிறிஸ் கெயில்.

பத்தாயிரம் ரன்கள்

பத்தாயிரம் ரன்கள்

இந்த சிக்ஸர்கள் சாதனையோடு, கிறிஸ் கெயில் ஒருநாள் போட்டிகளில் 10,000 ரன்களை கடந்தும் சாதனை புரிந்தார். வெ.இண்டீஸ் சார்பாக 10,000 ரன்களை கடக்கும் இரண்டாவது வீரர் ஆவார் கிறிஸ் கெயில்.

வெ.இண்டீஸ் சார்பாக இருவர்

வெ.இண்டீஸ் சார்பாக இருவர்

பிரையன் லாரா ஒருநாள் போட்டிகளில் 10,405 ரன்கள் அடித்துள்ளார். அவருக்கு அடுத்து தற்போது கெயில் 10,074 ரன்கள் அடித்துள்ளார். உலகக்கோப்பை வரை ஒருநாள் போட்டிகளில் ஆடவுள்ள கெயில், நிச்சயம் லாராவை முந்துவார்.

போட்டியில் தோல்வி

போட்டியில் தோல்வி

இந்த சாதனைகள் நிகழ்ந்தாலும், கிறிஸ் கெயில் 162 ரன்கள் அடித்தும் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் வெ.இண்டீஸ் தோல்வி அடைந்தது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 418 ரன்கள் குவித்தது. வெ.இண்டீஸ் அணி 389 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

Story first published: Thursday, February 28, 2019, 14:01 [IST]
Other articles published on Feb 28, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+