பேட்டி எடுத்த பெண் நிருபரிடம் 'பேட்' பற்றி படு ஆபாச கமெண்ட்.. மீண்டும் சர்ச்சையில் கிறிஸ் கெயில்
பெங்களூர்: பேட்டி எடுத்த பெண் நிருபரிடம் ஆபாசமான முறையில் பேசியதாக மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் வீரரும், ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக ஆடுபவருமான கிறிஸ் கெயில் மீது சர்ச்சை எழுந்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் நடைபெற்ற உள்நாட்டு டி20 கிரிக்கெட் தொடரான 'பிக் பாஷ்-ல்' ஆடிய கிறிஸ் கெயில் டிவி வர்ணனையாளரான பெண்ணிடம் மோசமான முறையில் பேசினார். இதற்காக கெயிலுக்கு 10 ஆயிரம் ஆஸ்திரேலிய டாலர் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும், ஆஸ்திரேலியாவில் தனது அறையில் தங்கியிருந்தபோது, சாப்பாடு கொண்டு வந்த பணிப்பெண்ணிடம், இடுப்பில் கட்டியிருந்த டவலை அவிழ்த்து, இதையா தேடுகிறாய் என்று தனது ஆணுறுப்பை காட்டி ஆபாசமாக நடந்து கொண்டதாக அந்த பெண் பேட்டியளித்தார்.

பெண் குழந்தை
இந்த சர்ச்சைகளை தொடர்ந்து ஐபிஎல் தொடரில் கெயில் ஆடி வருகிறார். தொடரின் நடுவே, அவரின் மனைவிக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தையை பார்த்துவிட்டு பெங்களூர் அணிக்கு திரும்பிய கெயில் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

பிரிட்டீஷ் பத்திரிகை
இம்முறை கெயில் சர்ச்சையில் சிக்கியுள்ளது பெண் பத்திரிகையாளர் ஒருவரிடம். அவர் இங்கிலாந்தை சேர்ந்த தி டைம்ஸ் பத்திரிகையின் பெண் நிருபர் கர்லோடே எட்வர்ட்ஸ் என்பவராகும்.

பெண் சுதந்திரம்
கெயிலிடம் பேட்டியெடுக்க அந்த பெண் நிருபர் சென்றபோதுதான், இந்த சம்பவம் நடந்துள்ளது. கிரிக்கெட்டை தாண்டி, பெண்களின் சுதந்திரம் குறித்து கெயிலிடம் நிருபர் கருத்து கேட்டபோது மீண்டும் சுயரூபத்தை வெளிக்காட்டினார் கெயில்.

மன்மதனாக்கும்
கெயில் கூறியதாக அந்த நிருபர் எழுதியுள்ள விவரம் இதுதான்: பெண்கள்கள் ஆண்களுக்கான சம உரிமையையும் தாண்டி வளர்ந்துவிட்டனர். எனது அழகை கண்டு மயங்கி என்மீது சாய்கிறார்கள்.

பெரிய பேட்
நான் நல்ல ஆட்டக்காரன் என்கிறார்கள். காரணம், என்னிடம் உள்ள பேட் உலகத்திலேயே, மிகவும் பெரியது, கனமானது. இதை உங்களால் ஒரு கையால் தூக்க முடியாது. இரு கைகளையும் பயன்படுத்தினால்தான் தூக்க முடியும் (அத்தனையிலும் இரட்டை அர்த்தம்).

த்ரீசம்
நீங்கள் (பெண் நிருபர்) எத்தனை கருப்பினத்து ஆண்களை அனுபவித்திருப்பீர்கள்? எப்போதாவது த்ரீசம் செய்துள்ளீர்களா? நான் பந்தையம் வேண்டுமானாலும் கட்ட தயார், நீங்கள் த்ரீசம் செய்திருப்பீர்கள், இல்லையா.. இவ்வாறு கெயில் நாராசமாக பேசினாராம்.

சர்ச்சை
நேற்று எடுத்த அந்த பேட்டி பற்றி பெண் பத்திரிகையாளர், இவ்வாறு கூறியுள்ளார். இது கெயில் மீது புது சர்ச்சையை உருவாக்கியுள்ளது. ஆஸ்திரேலிய சம்பவத்திற்கு பிறகு, கெயில் பேட்டிங்கில் சோபிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications