Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பவுலர்களின் 'பால்'களை விளாசும் கிறிஸ் கெயிலை புட்டியில் பாலூட்ட வைத்துவிட்டார்களே!

ஜமைக்கா: "எதிரணி வீரர்கள் வீசும் 'பால்'களை கருணையே காட்டாமல் ஸ்டேடியத்திற்கு வெளியே அடித்து துரத்தும் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெயிலுக்குள், குழந்தைக்கு 'பால்' ஊட்டும் ஒரு பாசமிகு தந்தை ஒளிந்து கொண்டுள்ளார் பாருங்களேன்.." என்பதுதான் இன்றைக்கு கிரிக்கெட் ரசிகர்களின் டாக் ஆப் தி டவுனாக உள்ளது.

கிறிஸ் கெயில் தனது இன்ஸ்ட்ராகிராம் மற்றும் பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு புகைப்படம்தான், இதற்கு காரணம்.

கிறிஸ் கெயில்-நடாஷா தம்பதிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது அகில உலகமும் அறிந்த செய்திதான். ஆஸ்திரேலியாவில் டிவி வர்ணணையாளரிடம் கண்டதையும் பேசி சர்ச்சைக்குள்ளான ஒரு வார்த்தையையே பெண் குழந்தைக்கு கெயில் சூட்டியும் தெரிந்ததுதான்.

குழந்தைக்கு காரண பெயர்

குழந்தைக்கு காரண பெயர்

ஆம்.. குழந்தையின் பெயர் blush. இந்த வார்த்தையை சொல்லியதால்தான் ஆஸ்திரேலிய டி20 கிரிக்கெட் சுற்றுப் பயணத்தின்போது உலகின் கவனத்தை ஈர்த்தார் கெயில். எனவே அதையே குழந்தைக்கும் பெயராக சூட்டினார்.

உலகின் இளவரசி

உலகின் இளவரசி

அதேநேரம், தனது குழந்தைக்கு ஸ்பெஷல் செல்ல பெயர் ஒன்றையும் சூட்டியுள்ளார் அவர். அது என்னவென்றால் உலகின் இளவரசியாம்.

அதற்கும் பிளாஷ்பேக்

அதற்கும் பிளாஷ்பேக்

எல்லா பெற்றோருக்கும் தங்கள் குழந்தைகள்தானே இளவரசன் அல்லது இளவரசியாக தெரிவார்கள். இவருக்கு மட்டும் என்ன ஸ்பெஷல் என்று கேட்கிறீர்களா. அதற்கும் ஒரு பிளாஷ்பேக் உள்ளது. கெயில்

இதுதான் காரணம்

இதுதான் காரணம்

கெயில் தனது பேட்டிங் திறமையை தானே மெய்ச்சிக்கொள்பவர். சமீபகாலமாக அடிக்கடி சொதப்பினாலும் கூட, தன்னை, 'யூனிவர்ஸ் பாஸ்' என்று சோஷியல் மீடியாக்களில் பெயர் சூட்டி அகம் மகிழ்பவர். இவரின் குழந்தை என்பதால், அந்த பாப்பா பெயர் யுனிவர்சல் இளவரசியாம். இதுவும் அவரே சூட்டிக் கொண்டது.

ஒழிந்துள்ள தந்தை

ஒழிந்துள்ள தந்தை

அந்த இளவரசியை மடியில் வைத்தபடி, பால் புட்டியில் பால் கொடுத்த போட்டோவைத்தான் இந்த சில பல முன் குறிப்புகளோடு கெயில் ஷேர் செய்துள்ளார். 7 அடி உயர முரட்டு மனிதனுக்குள் இப்படி ஒரு தந்தை ஒழிந்து கிடந்துள்ளாரே என உச்சு கொட்டியபடியே போட்டோவை பார்த்து ரசிக்கிறார்கள் ரசிக சிகாமணிகள்.

அது சரிதான்

அது சரிதான்

ஆனால் ஒன்று.. எத்தனை பெரிய பிரபலமாக இருந்தாலும், குழந்தையை பார்த்துக்கொள்ளும் பொறுப்பை மனைவிமார்கள் நைசாக கணவன் தலையில் கட்டிவிடுவார்கள் என்பதற்கு கெயில் சம்பவம் ஒரு உதாரணம்.

Story first published: Wednesday, August 3, 2016, 15:47 [IST]
Other articles published on Aug 3, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+