Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டேட்டிங் போலாமா.. டிவிட்டரில் கேட்ட ரசிகை.. குசும்பாக பதிலளித்த கெய்ல்!

டெல்லி: கிறிஸ் கெய்ல் அதிரடி வீரர் மட்டுமல்ல, அசகாய சூரரும் கூட (பற்பல சேட்டைகளில்). அதேசமயம், குசும்பாக பேசுவதிலும் கில்லாடி.

சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் இப்படித்தான் பெண் நிருபரிடம் ஏடாகூடமாகப் பேசி சர்ச்சையில் சிக்கினார். அதன் பிறகு ரொம்ப சூதானமாக பேசி வருகிறார் கெய்ல்.

Chris Gayle gives epic reply when a female fan asked him out

தற்போது ஐபிஎல் சீசன் தொடங்கி நடந்து வருகிறது. இதில் ஐபிஎல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இடம் பெற்றுள்ளார் கெய்ல்.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் ரசிகை ஒருவர் டிவிட்டரில் கெய்லிடம் ஒரு கேள்வியைக் கேட்க அவர் அதற்கு குசும்பாக பதிலளித்துள்ளார். ஆனால் இதில் ஆஸ்திரேலியா அளவுக்கு சர்ச்சை ஏதும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மிஸ் ஆரோஹி என்ற பெண் டிவிட்டரில் கெய்லிடம், எனது இதயம் உங்களுக்காக மட்டுமே துடிக்கிறது பாஸ். நாம் டேட்டிங் போகலாமா என்று கேட்டுள்ளார். அதற்கு கெய்ல், நீங்க பில்லை கட்டுவதாக இருந்தால் நான் ரெடி என்று கலாய்த்துள்ளார்.

ம்... டேட்டிங் போனாங்களா, இல்லையான்னு தெரியலை பாஸ்!

Story first published: Thursday, May 5, 2016, 13:08 [IST]
Other articles published on May 5, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+