Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இளநீர் இறால் கொடுங்க.. அப்படியே சாப்பிடுவார் கெய்ல்...!

கொல்கத்தா: ரன் மன்னன் கிறிஸ் கெய்ல், சாப்பாட்டு மன்னாகவும் இருக்கிறார். அதிலும் கொல்கத்தாவின் பெருமை வாய்ந்த ரசகுல்லாவும், சிங்கிலி மச்சர் மலாய் கறியும் அவருக்கு ரொம்பப் பிடித்துப் போய் விட்டதாம்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் மேற்கு இந்தியத் தீவுகள் அணியில் இடம் பெற்றுள்ள கெய்ல், கொல்கத்தாவில் நடந்த முதல் டெஸ்ட் போட்டிக்காக அங்கு தங்கியிருந்த நாட்களில் இந்த உணவுகளைத்தான் ஒரு பிடி பிடித்தாராம்.

இந்த உணவுகளை சாப்பிட்ட பிறகு அவர் சொன்ன வார்த்தை.. அசத்திட்டீங்கா கொல்கத்தாக்காரர்களே என்பதுதானாம்.

இளநீரில் இறால்

இளநீரில் இறால்

சிங்கிரி மச்சார் மலாய் கறி என்பது வேறு ஒன்றும் இல்லை, இளநீரில் இறால் மீன் பொறியலாகும்.

மிஷ்டி டோய் கூட பிடிக்குமே

மிஷ்டி டோய் கூட பிடிக்குமே

அதேபோல மிஷிடி டோய், ரசகுல்லாவும் அவருக்கு ரொம்பப் பிடித்து விட்டதாம்.

கொல்கத்தா வீரராச்சே...

கொல்கத்தா வீரராச்சே...

ஐபிஎல்லில் விளையாடும் கெய்ல், முன்பு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்றிருந்தவர். அந்த வகையில் கொல்கத்தாவுக்கு வந்தால் இந்த உணவுகளை விட மாட்டாராம்.

கரண்டி எதுக்குப்பா.. கை இருக்க

கரண்டி எதுக்குப்பா.. கை இருக்க

ஆரம்பத்தில் இந்த இறால் மீனை கரண்டியில் எடுத்துச் சாப்பிட திணறினாராம். பிறகு கரண்டியை தூக்கிப் போட்டு விட்டு நம்ம ஊர் ஸ்டைலில் கையாலேயே எடுத்து சாப்பிட்டு சந்தோஷப்பட்டாராம்.

சச்சினுக்கும் பிடிக்கும்

சச்சினுக்கும் பிடிக்கும்

இளநீர் இறால் பொறியல் சச்சினுக்கும் கூட மிகவும் பிடித்த உணவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

சால்டேலேக் ரெஸ்டாரென்ட்டில் ஹால்ட்

சால்டேலேக் ரெஸ்டாரென்ட்டில் ஹால்ட்

கொல்கத்தா டெஸ்ட் முடிந்த பின்னர் மும்பைக்குப் பறப்பதற்கு முன்பாக சால்ட்லேக் ரெஸ்டாரென்ட்டுக்கு விசிட் அடித்த கெய்ல் அங்கு இந்த உணவுகளை ஒரு பிடி பிடித்தைதப் பார்க்க முடிந்தது.

Story first published: Sunday, November 10, 2013, 15:26 [IST]
Other articles published on Nov 10, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+