முச்சதம விளாசிய கிறிஸ் கெயில்.. மொத்தம் 1462 ரன்கள் குவிப்பு.. 747 ரன்கள் குவித்த வெஸ்ட் இண்டீஸ்
பார்படாஸ்: ரன்கள் மழை நீர் போல் குவிந்தது. மொத்தம் 8 சதங்கள். அதில் ஒரு முச்சதம் ( Triple century) அடங்கும்.தென் ஆப்பிரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுக்கள் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் மேட்ச்.2005 ல் செயிண்ட் ஜான்ஸ் மைதானத்தில் தொடரின் 4 வது டெஸ்ட் மேட்ச்.
முதலில் பேட்டிங் ஆடிய தென் ஆப்பிரிக்கா துவக்க வீரர்கள் ஜோடி முதல் நாள் முடிவில் 214 ரன்கள் எடுத்தனர். ஏ பி டீ வில்லியர்ஸ் 103*, கேப்டன் கிரஹாம் ஸ்மித் 106*இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் அந்த அணியின் ஸ்கோர் 524 / 4.இன்னும் இரண்டு வீரர்கள் சதங்கள் எடுத்து அசத்தினர்.

ஜாக்ய்ஸ் கல்லீஸ் மற்றும் அஷ்வெல் பிரின்ஸ்.மூன்றாம் நாள் தென் ஆப்பிரிக்கா அணி தங்கள் முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை முடித்துக் கொண்டது, 6 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு.
ஸ்கோர் 588 / 6 டிக்ளர்.
ஏ பி டீ வில்லியர்ஸ் 114
(173 பந்துக்கள் எதிர் கொண்டது. 13 x 4 & 1 x 6 )
கேப்டன் கிரஹாம் ஸ்மித் 126
(173 பந்துக்கள் எதிர் கொண்டது. 19 x 4 )
ஜாக்ய்ஸ் கல்லீஸ் 147
( 287 பந்துக்கள் எதிர் கொண்டது. 14 x 4 & 1 x 6 )
அஷ்வெல் பிரின்ஸ் 131
( 254 பந்துக்கள் எதிர் கொண்டது. 13 x 4 & 1 x 6 )
முதல் விக்கெட்டுக்கு பார்ட்னர்ஷிப் ரன்கள் 245.முதல் இரண்டு விக்கெட்டுக்களும் அணியின் ஸ்கோர் 245 இருக்கும் பொழுது எடுக்கப் பட்டன.கல்லீஸ், பிரின்ஸ் ஜோடி சேர்ந்து அணிக்கு 267 ரன்கள் சேர்த்தனர்.
மேற்கு இந்திய ஒப்பனிங் பவுலர் டரேன் பவல் 2 விக்கெட்டுக்கள் எடுத்தார்.மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் மேற்கு இந்திய தீவுக்கள் அணி 1 விக்கெட்டை இழந்து 299 ரன்கள் குவித்து விட்டனர்.
முதல் விக்கெட்டை இழந்த பொழுது அணியின் ஸ்கோர் 14 ரன்கள். ஓபன் செய்த கிறிஸ் கெயில் உடன் ஜோடி சேர்ந்தவர் ராம்நரேஷ் சார்வான். இருவரும் அதிரடி ஆட்டங்களை வெளிப் படுத்தினர்.
அந்த நாள் ஆட்ட முடிவில் இருவரும் சதம் எடுத்து அவுட் ஆகவில்லை.
கிறிஸ் கெயில் 184*.
ராம்நரேஷ் சார்வான் 103*
அடுத்த நாளும் அதிரடி ஆட்டம் தொடர்ந்தது.
மேற்கு இந்திய தீவுக்கள் அணி 500 ரன்களை கடந்தது.
4 நாள் ஆட்ட முடிவில் ஸ்கோர் 565 / 5.
ஒப்பனிங் வீரர் முச்சதம் அடித்து அவுட் ஆனார், கிறிஸ் கெயில்
(483 பந்துக்கள் எதிர் கொண்டது. 37 x 4 & 3 x 6 )
மைதானத்தின் நாலா பக்கமும், எல்லா திக்குகளிலும்
பவுண்டரிகள் விளாசி உடன் சிக்ஸர்களும் அடித்து அசத்தினார் கிறிஸ் கெயில்.அவரை அவுட் செய்ய தென் ஆப்ரிக்கா வீரர்கள் திணறினார்கள்.
ஒரு வழியாக
ஸ்யோந்தேகி வீசிய பந்தில் ஸ்மித் கேட்ச் பிடிக்க கிறிஸ் கெயில் அவுட் ஆனார்.5 ஆம் நாள் ஆட்டத்தில் மேற்கு இந்திய தீவுக்கள் அணி 700 ரன்களை கடந்து ஆல் அவுட் ஆகினார்கள்.
ஸ்கோர் 747.
ராம்நரேஷ் சார்வான் 127.( 279 பந்துக்கள் எதிர் கொண்டது. 14 x 4 & 2 x 6 )
அடுத்த இரண்டு சதங்கள் குவித்த வீரர்கள்
கேப்டன் ஷிவ்நரைன் சந்தர்பால் 127
( 287 பந்துக்கள் எதிர் கொண்டது. 13 x 4 )
டிவேனவ் பிராவோ 107
( 235 பந்துக்கள் எதிர் கொண்டது. 13 x 4 )
பவுலர் ஸ்யோந்தேகி வீழ்த்திய விக்கெட்டுக்கள் 3.
தென் ஆப்பிரிக்கா அணியின் 11 வீரர்களும் பவுலிங் செய்தனர்.
இரண்டாவது இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா அணியின் ஸ்கோர் 1 விக்கெட் இழப்பிற்கு 127 இருக்கும் பொழுது ஆட்டம் டிராவில் முடிவு பெற்றது.
இந்த.டெஸ்டில் மொத்தம் 1462 ரன்கள் குவிக்கப் பட்டன.
மொத்த விக்கெட்டுக்கள் 17.இரண்டு வீரர்கள் தலா 127 ரன்கள் எடுத்தனர்.டெஸ்டில் மொத்தம் 161 பவுண்டரிகள் 10 சிக்ஸர் கள்.
மேற்கு இந்திய தீவுக்கள் அணிக்காக அறிமுக டெஸ்ட் ஆடிய வீரரின் பெயர் டவ்யிட் வாஷிங்டன்.
வாசுதேவன், பெங்களூரு


Click it and Unblock the Notifications