For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கம்னு இரு, இல்லாட்டி 'நறுக்'குன்னு கொட்டிருவேன்.. போலார்டை எச்சரித்த கெய்ல்

பெங்களூர்: மும்பை இந்தியன்ஸ் வீரர் கீரன் போலார்டுக்கும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் பந்து வீச்சாளர் மிட்சல் ஸ்டார்க்குக்கும் இடையே மோதல் வெடித்தபோது போலார்டை சமாதானப்படுத்த முயன்ற பெங்களூர் வீரர் கிறிஸ் கெய்ல், தான் போலார்டை எப்படி அமைதிப்படுத்தினேன் என்பது குறித்து விளக்கியுள்ளார்.

தலையில் நறுக்கென்று கொட்டுவேன் என்று கூறி தான் போலார்டை அமைதிப்படுத்தியதாக அவர் சிரித்தபடி கூறினார்.

இந்த சண்டை காரணமாக இருவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது நினைவிருக்கலாம்.

இந்த மோதலின்போது நடுவில் புகுந்து பஞ்சாயத்து செய்த அனுபவம் குறித்து கெய்ல் கூறியிருப்பதாவது...

கொட்டிப்புடுவேன்

கொட்டிப்புடுவேன்

நான் போலார்டிடம் பேசியபோது அவரது கோபம் தீர்ந்தபாடாகத் தெரியவில்லை. இதனால் சற்று கடுமையாகவே, இப்போது அமைதி ஆகிறாயா இல்லையா.. இல்லாவிட்டால் தலையில் கொட்டுவேன் என்று கூறினேன்.

கடும் போட்டி காரணமாக ஏற்பட்ட மோதல்

கடும் போட்டி காரணமாக ஏற்பட்ட மோதல்

அந்தப் போட்டி மிகவும் கடுமையாக இருந்தது. இதனால் ஏற்பட்ட மோதல்தான் பெரிதாகி விட்டது.

பெங்களூர் தேறி வரும்

பெங்களூர் தேறி வரும்

தொடர்ந்து நாங்கள் சில முக்கிய போட்டிகளை இழந்து வருவதால் எங்களை விட்டு எல்லாம் விலகி விட்டதாக அர்த்தம் இல்லை. நாங்கள் தாழ்ந்திருக்கிறோம் ஆனால் முழுமையாக வீழவில்லை.

பலத்தோடு விளையாடுவது அவசியம்

பலத்தோடு விளையாடுவது அவசியம்

இனி வரும் போட்டிகளில் முழு பலத்தைக் காட்டி விளையாட வேண்டியது அவசியம். அதைச் செய்தாலே போதும்.

பலத்தோடு விளையாடுவது அவசியம்

பலத்தோடு விளையாடுவது அவசியம்

இனி வரும் போட்டிகளில் முழு பலத்தைக் காட்டி விளையாட வேண்டியது அவசியம். அதைச் செய்தாலே போதும்.

டிவில்லியர்ஸைப் பார்த்துப் பொறாமை இல்லை

டிவில்லியர்ஸைப் பார்த்துப் பொறாமை இல்லை

எனது அணியின் ஆப் டிவில்லியர்ஸ் அருமையான வீரர். அவர் சிறப்பாக ஆடுவதைப் பார்த்து நான் பொறாமைப்படவில்லை. உண்மையிலேயே உலகின் மிகச் சிறந்த பேட்ஸ்மேன்களில் அவரும் ஒருவர். அவருடன் இணைந்து விளையாடுவதை ரசிக்கிறேன் .. என்னா ஒரு வீரர் அவர் என்றார் கெய்ல்.

Story first published: Saturday, May 10, 2014, 15:44 [IST]
Other articles published on May 10, 2014
English summary
Royal Challengers Bangalore opener Chris Gayle did his bit by trying to calm down Kieron Pollard when the Mumbai Indians star clashed with Mitchell Starc at Wankhede Stadium on Tuesday night. "I told Kieron that I will punch him in the head," Gayle told mid-day on the sidelines of the Adidas FIFA flagbearers program at Priyadarshini Park yesterday. "It was just one of those moments that happen during an intense game," added the 34-year-old.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X