Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மக்களே தயாராகுங்க... எண்டர்டெயின் பண்ண அடுத்த டிஜே ரெடி

டெல்லி : இந்த கொரோனா லாக்டவுன் சர்வதேச கிரிக்கெட் வீரர்களின் பல்வேறு திறமைகளை வெளிக்கொண்டு வந்துள்ளது.

வீட்டிலேயே முடங்கியுள்ள வீரர்கள் தங்களது சமையல், கார்டனிங் உள்ளிட்ட பல்வேறு திறமைகளை வெளிக்கொண்டு வந்தவண்ணம் உள்ளனர்.

இந்நிலையில், ஏற்கனவே தனக்குள்ள டிஜே திறமையை இந்த கொரோனா வைரஸ் காலத்தில் மேலும் வளர்த்துக்கொள்ளும் முயற்சியில் மேற்கிந்திய தீவுகள் அணியின் பேட்ஸ்மேன் கிறிஸ் கெயில் இறங்கியுள்ளார்.

திறமைகளை வெளிப்படுத்தும் வீரர்கள்

திறமைகளை வெளிப்படுத்தும் வீரர்கள்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சர்வதேச அளவில் அனைத்து போட்டிகளும், குறிப்பாக கிரிக்கெட் போட்டிகள் முடங்கியுள்ளன. இதையடுத்து தங்களது வீடுகளில் முடங்கியுள்ள விளையாட்டு வீரர்கள், கிரிக்கெட் தவிர்த்த பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தியவண்ணம் உள்ளனர். இதற்கு அவர்களுக்கு சமூகவலைதளங்கள் சிறந்த முறையில் கைகொடுக்கிறது.

ரசிகர்கள் பாராட்டு

ரசிகர்கள் பாராட்டு

சமையல், கார்டனிங் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் தங்களது திறமைகளை அவர்கள் தொடர்ந்து சமூக வலைதளங்கள் மூலம் பதிவிட்டு வருகின்றனர். இதன்மூலம் அவர்களது மற்ற திறமைகளும் வெளிப்படுவதால், அவர்களது ரசிகர்கள் உற்சாகமடைந்து வருகின்றனர். தங்களது மனதிற்கு பிடித்தமான வீரர்கள் சமையல் உள்ளிட்டவற்றை செய்யும்போது, அவர்கள் அதுகுறித்து மகிழ்ச்சியடைகின்றனர்.

மியூசிக் சிஸ்டத்தை கொண்டு பயிற்சி

மியூசிக் சிஸ்டத்தை கொண்டு பயிற்சி

இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணியின் பேட்ஸ்மேன் கிறிஸ் கெயிலின் மற்றொரு திறமை இந்த லாக்டவுன் காலத்தில் வெளிப்பட்டுள்ளது. தன்னுடைய டிஜே திறமையை இந்த ஓய்வை பயன்படுத்தி அவர் மெருகேற்றிக் கொண்டுள்ளார். தன்னுடைய வீட்டில் உள்ள மியூசிக் சிஸ்டத்தை கொண்டு அவர் இந்த திறமையை வலுப்படுத்திக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.

கிறிஸ் கெயில் பாராட்டு

கிறிஸ் கெயில் பாராட்டு

ஐபிஎல் வெப்சைட்டின் 'ஓபன் நெட்ஸ் வித் மயங்க்' ஷோ மூலம் பேசிய கிறிஸ் கெயில், தான் ஒரு இசைக் காதலன் என்றும், தற்போது வீட்டிலிருந்தபடியே தான் டிஜே ஆவதற்கு பயிற்சி மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். சர்வதேச அளவில் இசை ஒரு வலிமையான ஆயுதம் என்றும் அவர் கூறியுள்ளார்.

Story first published: Wednesday, June 24, 2020, 16:21 [IST]
Other articles published on Jun 24, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+