Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சான்டா கிளாஸை நையாண்டி பண்ணிய கிறிஸ் கெயில்.. என்ன கேட்டாருன்னு நீங்களே பாருங்க!!

துபாய் : வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயில் தன் கிறிஸ்துமஸ் விருப்பத்தை சான்டா க்ளாஸ்-இடம் கேட்டுள்ளார்.

வழக்கம் போல கிறிஸ் கெயில் இதிலும் கிண்டலுடன் நடந்து கொண்டுள்ளார். அப்படி என்ன கேட்டார் சான்டா கிளாஸிடம்?

குழந்தைகள் போல..

குழந்தைகள் போல..

கிறிஸ்துமஸ் தினத்தில் சான்டா கிளாஸிடம் குழந்தைகள் தங்கள் விருப்பங்களை கூறி நிறைவேற்றுமாறு கேட்பதுண்டு. அதே போல, கெயில் தன் விருப்பத்தை நகைச்சுவையாக கேட்டுள்ளார். கிறிஸ் கெயில் உடல் எடை கடந்த சில வருடங்களில் அதிகமாகி விட்டது. அதை குறைக்க வேண்டும் என கேட்டுள்ளார், கூடவே வேறு ஒரு விஷயத்தையும் கேட்டுள்ளார்.

கெயிலின் விருப்பம்

"அன்புள்ள சான்டா, என் ஆசையெல்லாம் பெரிய (நிறைய பணத்துடன்) பேங்க் அக்கவுன்ட் மற்றும் ஒல்லியான உடம்பு. தயவு செய்து கடந்த வருடம் போல மாற்றிக் கொடுத்து விடாதே" என கூறியுள்ளார். அதாவது, ஒல்லியான பேங்க் அக்கவுன்ட் மற்றும் பெரிய உடம்பு என மாற்றாமல் கொடுக்குமாறு கூறி இருக்கிறார்.

கெயில் ரசிகர் கூட்டம்

கிறிஸ் கெயில் வெஸ்ட் இண்டீஸ் நாட்டுக்கு ஆடுவதை காட்டிலும் பல நாடுகளின் டி20 தொடர்களில் தான் ஆடி வருகிறார். அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கவும் மறப்பதில்லை. எனினும், தன் நையாண்டி வேலைகளாலும், அதிரடி பேட்டிங்காலும் தனக்கென பெரும் ரசிகர் கூட்டத்தை உண்டாக்கி வைத்துள்ளார்.

கெயில் சொல்வது உண்மையா?

கெயில் சொல்வது உண்மையா?

உலகம் முழுவதும் இடைவிடாமல் டி20 தொடரில் ஆடி வரும் கெயிலிடம் பணம் இல்லையா? நிச்சயம் இதற்கு வாய்ப்பில்லை. டி20 தொடர்களில் கோடிக் கணக்கில் கல்லா கட்டி வரும் கிறிஸ் கெயில் ஏதோ காமெடிக்காக தன் ஆசையாக இதை கூறி இருக்கிறார் என எடுத்துக் கொள்வோம்.

Story first published: Tuesday, December 25, 2018, 13:13 [IST]
Other articles published on Dec 25, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+