Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் மினி ஏலம் - அதிக விலைக்கு செல்லக் கூடிய வீரர் யார்? கிறிஸ் கெயில் கணிப்பு

கொச்சி : ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணி கடைபிடிக்கும் முறையை குறித்து கிறிஸ் கெயில் கடுமையாக விமர்சித்துள்ளார மினி ஏலத்திற்காக ஜியோ சினிமா வழங்கும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கெயில் பங்கேற்று இருக்கிறார். அப்போது நடைபெற்ற மாதிரி ஏலத்தில் கிறிஸ் கெயில் ஆர் சி பி மற்றும் கொல்கத்தா அணிக்காக வீரர்களை தேர்வு செய்தார் .

இதை தொடர்ந்து பேசிய கிறிஸ் கெயில் கொல்கத்தா அணியை பொறுத்தவரை இங்கிலாந்து அணியின் அதிரடி வீரர் பில் சால்டை தேர்வு செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார் .

இது குறித்து பேசிய அவர் பில் சால்ட் டாப் ஆர்டரில் அதிரடியாக விளையாட கூடியவர். சுழற் பந்துவீச்சையும் அற்புதமாக எதிர்கொள்வார்.

ஆர்சிபி ரசிகன்

ஆர்சிபி ரசிகன்

விக்கெட் கீப்பிங் செய்யும் திறமையும் அவரிடம் இருக்கிறது. அப்படி இருக்க அவர் குறித்து எந்த அணியும் பேசாதது ஆச்சரியமாக இருக்கிறது. என்னை கேட்டால் கொல்கத்தா அணி கையில் இருக்கும் பணத்தை வைத்து பில் சால்ட் எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என்னை பொறுத்தவரை நான் எப்போதுமே ஆர் சி பி அணியின் ரசிகன். ஆர் சி பி அணி கோப்பையை வெல்ல வேண்டும் என ஆசைப்படுகிறேன். நடப்பு ஏலத்தில் இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்பு இருக்கும் என நான் கருதுகிறேன்.

சாதனைக்கு வாய்ப்பு

சாதனைக்கு வாய்ப்பு

இது மினி ஏலமாக இருந்தாலும் அதிக விலைக்கு வீரர்கள் தேர்வு செய்து புதிய சாதனை படைக்க வாய்ப்பு இருப்பதாக நான் கருதுகிறேன். பஞ்சாப் அணியை பொறுத்தவரை அவர்கள் அணியை அடிக்கடி மாற்றுவார்கள். ஒரு வீரருக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுக்க மாட்டார்கள். நீங்கள் அணியை அடிக்கடி மாற்றிக் கொண்டிருந்தால் உங்களால் ஒருபோதும் கோப்பையை வெல்ல முடியாது. பஞ்சாப் திட்டம் ஏதும் சரி வராது.

அதிர்ச்சி

அதிர்ச்சி

மாயங் அகர்வால் பஞ்சாப் அணிக்காக பல தியாகங்களை செய்திருக்கிறார். டாப் ஆர்டரில் அதிரடியாக ஆடக்கூடிய வீரராக இருக்கிறார். ஆனால் பஞ்சாப் அணி அவரை தக்க வைக்காமல் நீக்கி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. மாயங் அகர்வால் போன்ற நல்ல வீரர் இந்த ஏலத்தில் விலை போகாமல் இருந்தால் நான் நிச்சயம் அதிர்ச்சியில் இருப்பேன். மாயங் அகர்வால் திறமையை பல அணிகள் பயன்படுத்திக் கொள்ளும் என நான் நம்புகிறேன்.

கோரிக்கை

கோரிக்கை

மாயங் அகர்வாலுக்கு நல்ல விலை கொடுத்து தேர்வு செய்யுங்கள். அவர் நிச்சயமாக அணிக்காக போராடும் வீரராக விளங்குவார். பஞ்சாப் அணி அவரை நடத்திய விதம் நிச்சயம் மாயங் அகர்வாலுக்கு காயத்தை கொடுத்திருக்கும். பஞ்சாப் அணி கோப்பை வெல்ல வேண்டும் என்றால் முதலில் வீரர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுங்கள். அவர்களை அடிக்கடி மாற்றி வீணடித்து விடாதீர்கள். ஐபிஎல் தொடரே கடும் அழுத்தம் நிறைந்த போட்டிகள் ஆகும். அப்படி இருக்க நீங்களும் வெளியில் இருந்து கூடுதலாக அழுத்தத்தை கொடுத்தால், அவர்களால் எப்படி சரியாக விளையாட முடியும்.

சாம் கரண்

சாம் கரண்

நடப்பு ஏலத்தில் ஷாம்கரன் மற்றும் ஸ்டோக்ஸ் அதிக விலைக்கு செல்வார்கள் என நான் எதிர்பார்க்கிறேன். சாம் கரன் இளம் வீரர் என்பதால் அவர் எதிர்காலத்திற்கு பயன்படுவார். இதனால் அவர் மீது அனைத்து அணிகளின் கண்களும் இருக்கும். ஆர்சிபி அணி கோப்பையை வெல்ல வேண்டும் என நானும் டிவில்லியர்சும் கடுமையாக உழைத்தோம். ஆனால் அது நினைவாகவில்லை.

சாதனை உடைக்கப்படும்

சாதனை உடைக்கப்படும்

என்னுடைய ஐபிஎல் சாதனையான 175 ரன்கள் எதிர்காலத்தில் வீரர்கள் நிச்சயம் உடைப்பார்கள். அது யார் உடைப்பார் என்பதை காண நான் ஆர்வமாக இருக்கிறேன். சாதனைகளை உடைக்கத்தான் சாதனைகளை படைக்கப்படுகிறது. 175 ரன்கள் என்பது நிச்சயமாக எட்டக்கூடிய ஸ்கோர் தான். ஏன்? டி20 போட்டியில் இரட்டை சேதம் அடிக்கக்கூடிய நாட்களும் வெகு தூரத்தில் இல்லை.

Story first published: Friday, December 23, 2022, 13:47 [IST]
Other articles published on Dec 23, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+