பேட்டிங்கை போலவே சுய சரிதை புத்தகத்திலும் புகுந்து விளாசிய கிறிஸ் கெயில்
ஆன்டிகுவா: மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின், அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெயில் எழுதியுள்ள Six Machine என்ற புத்தகத்தில், அவரது பேட்டிங்கை போலவே அதிரடியான தகவல்களை கூறியுள்ளார்.
உங்களுக்கு என்னை தெரிந்திருக்கலாம், ஆனால், எனக்கு என்னை பற்றி தெரியாது.. என்ற முன்னுரையோடு ஆரம்பிக்கிறார் கிறிஸ் கெயில்.
ஐபிஎல் கிரிக்கெட் உலக கிரிக்கெட்டில் தாக்கத்தை ஏற்படுத்தியதாக புகழும் கிறிஸ் கெயில், ஒரே நாட்டுக்காக ஆடிய வீரர்களை பகைவர்களாகவும் மாற்றியது ஐபிஎல் என்றும் குறிப்பிடுகிறார்.

2013ம் ஆண்டு புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக 175 ரன்களை குவித்து நாட்-அவுட்டாக நின்றது குறித்து விவரிக்கும் கிறிஸ் கெயில், அந்த போட்டியில் கூடுதலாக பேட் செய்ய வாய்ப்பு கிடைத்திருந்தால் இரட்டை சதம் விளாசியிருப்பேன் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
எனது சிக்சரால் சேதத்திற்கு உள்ளான கார்களின் உரிமையாளர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றும் நகைச்சுவையாக ஓரிடத்தில் கெயில் குறிப்பிடுகிறார்.


Click it and Unblock the Notifications