கிறிஸ் கெயில் வெளியிட்ட சாம் கர்ரன் புகைப்படம்.. அவரா இது? இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்!
மொஹாலி : கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக ஆடி வரும் கிறிஸ் கெயில், அந்த அணியில் தன் சக வீரர் சாம் கர்ரனுடன் இருக்கும் இரண்டு புகைப்படங்களை சேர்த்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்.
அது தற்போது வைரல் ஆகி வருகிறது. சுமார் 193,000க்கும் அதிகமான லைக்குகளை அள்ளியுள்ளது. அப்படி என்ன புகைப்படம்?

பள்ளிப் பருவ புகைப்படம்
இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் சாம் கர்ரன் தன் பள்ளிப் பருவ காலத்தில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயிலுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். அப்போது சாம் கர்ரன் யார் என்று பலருக்கும் தெரியாது.

சாம் கர்ரன் புகழ்
தற்போது பஞ்சாப் அணிக்கு இருவரும் இணைந்து ஆடி வருகின்றனர். மேலும், சாம் கர்ரன் இங்கிலாந்து நாட்டில் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் அறிமுகமான இளம் வீரர். அடுத்த தலைமுறை கிரிக்கெட் வீரர்களில் சாம் கர்ரன் முக்கிய இடத்தை பிடிப்பார் என்ற ஆருடங்கள் இப்போதே கூறப்பட்டு வருகின்றன.
ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி
இந்த நிலையில், கிறிஸ் கெயில், பழைய புகைப்படம் போன்றே மீண்டும் ஒரு புகைப்படம் எடுத்து, இரண்டு படங்களையும், ஒன்றாக இணைத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதை ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியுடன் கண்டுகளித்தனர்.

ஹாட்ரிக் விக்கெட்
சாம் கர்ரன் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக பந்துவீசி கடைசி நேரத்தில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து பஞ்சாப் அணியை வெற்றி பெறச் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இளம் வீரரும், அனுபவ கிறிஸ் கெயிலும் இணைந்து பஞ்சாப் அணிக்கு துவக்கம் அளிப்பதை விரைவில் நாம் காணலாம்!


Click it and Unblock the Notifications