Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கெயில் அடித்த அடியில் ஆற்றில் போய் விழுந்த "சிக்சர் பால்"... நீந்திப் போய் எடுத்து வந்த ரசிகர்!

லண்டன்: இங்கிலாந்தில் கெயில் அடித்த சிக்சர் பந்தை எடுக்க நதிக்குள் குதித்த ரசிகருடன் போட்டோ எடுத்துப் பாராட்டியுள்ளார் கெயில்.

மேற்கிந்திய அணி வீரர் கெயில் தற்போது சோமர்செட் அணிக்காக இங்கிலாந்தில் நாட்வெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறார்.

கடந்த ஞாயிறன்று டவுன்டன் நகரில் நடந்த ஆட்டத்தில் கென்ட் அணிக்கு எதிராக கெயில் 62 பந்துகளில் 151 ரன்கள் எடுத்தார்.

சிக்சர்களை விளாசிய கெயில்:

சிக்சர்களை விளாசிய கெயில்:

இந்த போட்டியின் போது கெயில் 15 சிக்சர்களை விளாசினார். முதலில் விளையாடிய கென்ட் அணி 227 ரன்களை குவித்தது. கெயில் அதிரடியாக விளையாடியும் இந்த போட்டியில் சோமர்செட் அணியால் வெற்றி பெற முடியவில்லை. கென்ட் அணி 224 ரன்கள் எடுத்து 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது.

ஆற்றில் விழுந்த பந்து:

ஆற்றில் விழுந்த பந்து:

இந்த போட்டியில் கடைசி வரை அவுட் ஆகாமல் விளையாடிய கெயில், 20வது ஓவரின் கடைசி பந்தை அனைத்து பலத்தையும் திரட்டி சிக்சருக்கு மாற்றினார். கெயில் அடித்த வேகத்தில் மைதானத்தை தாண்டி சென்ற பந்து அருகில் இருந்த ஆற்றில் போய் விழுந்தது.

பந்தை எடுத்த ரசிகர்:

பந்தை எடுத்த ரசிகர்:

பந்து ஆற்றில் போய் விழுந்ததை பார்த்த மைதானத்தில் இருந்த மார்ட்டின் புல்லாக் என்ற ரசிகர் ஓடிப் போய் ஆற்றில் குதித்து நீந்தி பந்தை எடுத்தார்.

கடும் குளிரில் நீந்திய ரசிகர்:

கடும் குளிரையும் பொருட்படுத்தாது ஆற்றில் குதித்து மீட்ட பந்தை கொண்டு வந்து கெயிலிடம் வந்து கொடுத்தார். ரசிகரின் ஆர்வத்தைப் பார்த்த கெயில் அவரைப் பாராட்டியதுடன் அவரது குடும்பத்தினருடன் இணைந்து போட்டோவும் எடுத்துக் கொண்டுள்ளார்.

Story first published: Tuesday, June 2, 2015, 16:06 [IST]
Other articles published on Jun 2, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+