Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்னுடைய காசை திருப்பி கொடு..! நிக்கோலஸ் பூரானை பங்கமாக கலாய்த்த கிறஸ் கெயில்.. கம்பீர் விளக்கம்

மும்பை : ஐபிஎல் மினி ஏலத்தில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிக்கோலஸ் பூரானை 16 கோடி ரூபாய் கொடுத்து லக்னோ அணி ஏலத்தில் எடுத்திருப்பது ரசிகர்களிடையே விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கிறது.அதிரடி பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பராக அறியப்பட்ட நிக்கோலஸ் பூரான் கிரிக்கெட்டுக்கு அறிமுகமான காலத்தில் தனி ஆளாக போட்டியை வெற்றி பெற்று தந்தார்.

எனினும் கடந்த சில காலமாக நிக்கோலஸ் பூரான், பெரிய அளவில் சாதிக்கவில்லை. நடந்து முடிந்த டி20 உலக கோப்பையில் கூட நிக்கோலோஸ் பூரான் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

இதன் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் சுற்றிலே நடையை கட்டியது. கடந்த முறை ஐதராபாத் அணியால் பெருந்தொகை கொடுத்து வாங்கப்பட்டார்.

கடந்த 2 சீசன்

கடந்த 2 சீசன்

நிக்கோலஸ் பூரான் கடந்த ஐபிஎல் சீசனில் 14 போட்டியில் விளையாடி வெறும் 360 ரன்கள் மட்டுமே அடித்தார். அதற்கு முன்பு 12 போட்டியில் விளையாடி வெறும் 85 ரன்கள் மட்டுமே நிக்கோலஸ் பூரான் எடுத்தார். இதன் காரணமாக நிக்கோலஸ் பூரான் மீது ஹைதராபாத் அணி கடும் அதிருப்தியில் இருந்ததால் அவரை அதிரடியாக நீக்கியது.இதனால் இம்முறை நிக்கோலஸ் பூரான் குறைவான விலைக்கு செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது.

கம்பீர் விளக்கம்

கம்பீர் விளக்கம்

ஆனால் நிக்கோலஸ் பூரான் 16 கோடி ரூபாய் கொடுத்து லக்னோ அணி எடுத்தது. இதற்கு விளக்கம் அளித்துள்ள கம்பீர், நாங்கள் மற்ற வீரர்கள் எல்லாம் அடிப்படை விலைக்கு எடுத்தோம். இதனால் புரானுக்கு கூடுதலாக விலை கொடுத்தது என்று தவறும் இல்லை. நாங்கள் நினைத்த வீரர்கள் அனைவரையும் வாங்கி விட்டோம். நிக்கோலஸ் பூரான் எங்களுக்கு மூன்று போட்டிகளை வென்று கொடுத்தாலே போதும்.

கெயில் கிண்டல்

கெயில் கிண்டல்

18 பந்துகளில் 30 ரன்கள் அடித்தாலும் எங்களுக்கு போதுமானது. நிக்கோலஸ் பூரான் கண்டிப்பாக இம்முறை சிறப்பாக விளையாடுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. அவருக்கு கொடுத்த பணம் சரியானதுதான் என்று கம்பீர் கூறியிருந்தார். இந்த நிலையில் நிக்கோஸ் பூரானை கலாய்த்து உள்ள வெஸ்ட் இண்டீஸ் வீரர் கெயில், அதிக விலைக்கு சென்ற வீரர்கள் இனி பிரைவட் ஜெட் மூலம் பயணிக்கலாம்.

காரணமே இது தான்

காரணமே இது தான்

நிக்கோலஸ் பூரானை பொறுத்தவரை நான் அவருக்கு கொடுத்த கடனை இப்போது திரும்பி கேட்கிறேன். உன்னிடம் தான் பணம் வந்து விட்டதே , எனக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுத்து விடு என்று கிண்டல் அடித்தார். கிரிக்கெட் உலகத்திலேயே மிகவும் அதிர்ஷ்டகரமான வீரராக நிக்கோலஸ் பூரான் திகழ்வதாக பலரும் பாராட்டுகின்றனர். அபுதாபியில் நடைபெற்ற 10 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 10 போட்டிகளில் விளையாடி 345 ரன்கள் விளாசினார். இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 234 .இதனை வைத்து தான் லக்னோ அணி எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, December 24, 2022, 13:11 [IST]
Other articles published on Dec 24, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+