For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

2 வாரம் முன்னாடி அறிவித்த ஓய்வு முடிவை வாபஸ் வாங்கப் போகிறார்.. கிறிஸ் கெயில் செம காமெடி!!

Recommended Video

அறிவித்த ஓய்வு முடிவை வாபஸ் வாங்கப் போகிறார் கெயில்- வீடியோ

கிரெனடா : வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி மன்னன் கிறிஸ் கெயில் வரும் 2019 உலகக்கோப்பை தொடருடன் ஓய்வு பெறப்போவதாக இங்கிலாந்து ஒருநாள் தொடருக்கு முன் அறிவித்தார்.

பின்னர், இங்கிலாந்து தொடரில் தன் இயல்பான அதிரடி ஆட்டத்தால் மிரள வைத்து வந்தவர், தற்போது திடீரென தான் ஓய்வு முடிவை திரும்பப் பெறுவது குறித்து பேசியுள்ளார்.

அதிரடி சாதனைகள்

அதிரடி சாதனைகள்

இங்கிலாந்து ஒருநாள் தொடரில் இரண்டு சதங்கள், ஒரு அரைசதம் என அதிரடி காட்டி வரும் கெயில், ஒருநாள் போட்டியில் 10,000 ரன்கள் என்ற மைல்கல்லை கடந்தார். சர்வதேச அரங்கில் 500வது சிக்ஸரை அடித்து தெறிக்க விட்டார்.

மனம் மாறினார்

மனம் மாறினார்

இதனால், மனம் மாறியுள்ள கிறிஸ் கெயில், தன் உடல் ஒருநாள் போட்டிகளுக்கு ஏற்ப மாறிவிட்டது. நிறைய டி20 போட்டிகளில் ஆடியதால் 50-ஓவர் கிரிக்கெட்டுக்கு வருவது கடினம் என கருதியதாகவும் கூறியுள்ளார்.

இரண்டு மாதங்களில்..

இரண்டு மாதங்களில்..

தான் இன்னும் உடற் தகுதி மட்டும் பெற்றால் போதுமானது. தான் இன்னும் இரண்டு மாதங்களில் மாறிவிடுவேன் என்றும் கூறியுள்ளார். கிறிஸ் கெயிலுக்கு தற்போது 40 வயது ஆகப் போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தயார் ஆவாரா?

தயார் ஆவாரா?

உலகக்கோப்பைக்கு இடையே அவர் ஐபிஎல் தொடரிலும் ஆடுவார். அப்படி என்றால் எப்படி அவர் மீண்டும் 50 ஓவர் உலகக்கோப்பை தொடருக்கு தன்னை தகுதிப்படுத்திக் கொள்வார். என்னமோ போங்கப்பா?

உலகக்கோப்பைக்கு அப்புறம்?

உலகக்கோப்பைக்கு அப்புறம்?

2019 உலகக்கோப்பைக்கு பின்னர் ஓய்வு பெறாவிட்டால் கிறிஸ் கெயில் வெ.இண்டீஸ் அணிக்கு ஆடுவாரா? ஏன் இந்த கேள்வி என்றால் கடந்த சில ஆண்டுகளாக கிறிஸ் கெயில் தன் சொந்த நாட்டு அணியை விட பல உள்ளூர் டி20 அணிகளுக்கு ஆடியது தான் அதிகம். சொந்த நாட்டுக்கே ஆட முடியாத கெயில், இப்போது ஓய்வு பெறாமல் இருந்து என்ன செய்வார்?

Story first published: Friday, March 1, 2019, 18:38 [IST]
Other articles published on Mar 1, 2019
English summary
Chris Gayle U turn on retirement after smashing records in ODI
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X