Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

VIDEO: பெங்களூரு போட்டியில் சிக்சர் அடித்து பந்தை தொலைத்த கொல்கத்தா வீரர்…!! இணையத்தில் வைரல்

பெங்களூரு:கோலி அணிக்கு எதிரான போட்டியில், 102 மீட்டர் தூரத்துக்கு சிக்சர் அடித்து பந்தை தொலைத்தார் கொல்கத்தா வீரர் கிறிஸ் லின்.

ஐபிஎல் நடப்பு சீசனில் முதல் 4 போட்டிகளிலும் தோற்ற ஆர்சிபி அணி, முதல் வெற்றியை பெற கேகேஆரை எதிர்கொண்டது. சின்னசாமி மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பெங்களூரு அணியின் கோலி, டிவில்லியர்ஸ் ஜோடி, இந்த சீசனில் முதன்முறையாக அற்புத ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

கோலி, டிவில்லியர்ஸின் சிறப்பான பேட்டிங், ஸ்டோய்னிஸின் கடைசி நேர அதிரடியால் 20 ஓவர் முடிவில் 205 ரன்களை குவித்தது. 206 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய கேகேஆர் அணியின் கிறிஸ் லின், உத்தப்பா ஜோடி அருமையான தொடக்கம் தந்தனர்.

ரசல் அதிரடி

ரசல் அதிரடி

ராணாவும், தினேஷ் கார்த்திக்கும் பொறுப்புடன் ஆடினர். கடைசி நேரத்தில் காட்டடி ரசலின் அதிரடியால் வெற்றி இலக்கை எட்டியது கொல்கத்தா.

அதிரடியாக 43 ரன்கள்

அதிரடியாக 43 ரன்கள்

நடப்பு சீசனில் இதுவரை சரியாக ஆடாத சிலர் அபாரமாக ஆடினர். கோலி, கிறிஸ் லின் ஆகியோரை இதில் சொல்லலாம். அதிலும், இதுவரை சரியாக ஆடாமல் இருந்த லின், இந்த போட்டியில் 43 ரன்கள் அடித்தார்.

லின் விளாசல்

லின் விளாசல்

அவரின் ஆட்டத்தில் ஒரு முக்கியமான விஷயத்தை ரசிகர்கள் ஆச்சரியமாக பார்க்கின்றனர். கொல்கத்தா இன்னிங்ஸின்போது, 6வது ஓவரை சாஹல் வீசுகிறார். அந்த ஓவரின் 5வது பந்தை லின் முடிந்த மட்டும் விளாசுகிறார்.

காணாமல் போன பந்து

அவர் அடித்த அந்த பந்து ஸ்டேடியத்திற்கு வெளியே பறந்தது. அதைக்கண்டு கோலி மிகுந்த அதிருப்தியடைந்தார். கிறிஸ் லின் பந்தை ஸ்டேடியத்திற்கு வெளியே அனுப்பிய அந்த வீடியோ இணையத்தில் கலக்கி வருகிறது.

ஆர்பிட் வளையம்

ஆர்பிட் வளையம்

அதிலும் குறிப்பாக அவர் அடித்த சிக்சர்... அருமையான சிக்சர் என்று வர்ணனையாளர்கள் புகழ்ந்து தள்ளினர். அதில் அவர் சிக்சர் அடித்ததில் பந்து மைதானத்தை விட்டு வெளியே சென்றது. அந்த சிக்சரை வருணித்த வர்ணனையாளர்கள், பந்து ஆர்பிட் வளையத்துக்குள் சென்றுவிட்டது என்று கூறினர்.

Story first published: Saturday, April 6, 2019, 12:17 [IST]
Other articles published on Apr 6, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+