For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சிஎஸ்கே -ஆர்சிபி போட்டி.. இணையும் ஆல்-ரவுண்டர் கிறிஸ் மோரீஸ்

துபாய் : 59 ரன்கள் வித்தியாசத்தில் நேற்றைய போட்டியில் ஆர்சிபி டெல்லி கேபிடல்ஸ் அணியிடம் தோற்றுள்ளது.

இதுவரை விளையாடியுள்ள 5 போட்டிகளில் 3 போட்டிகளில் ஆர்சிபி அணி வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில் காயம் காரணமாக அணியில் இணையாமல் உள்ள கிறிஸ் மோரீஸ், தற்போது வரும் 10ம் தேதி நடைபெறவுள்ள சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணியில் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

5 போட்டிகளில் 3ல் வெற்றி

5 போட்டிகளில் 3ல் வெற்றி

துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 59 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி தோல்வி அடைந்துள்ளது. இதுவரை விளையாடியுள்ள 5 போட்டிகளில் 3ல் வெற்றி பெற்றுள்ள அந்த அணி 6 புள்ளிகளை பெற்று ஐபிஎல் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது.

கிறிஸ் மோரீஸ் விளையாடவில்லை

கிறிஸ் மோரீஸ் விளையாடவில்லை

அணியின் ஆடம் சம்பா உடல்நலக் குறைவு காரணமாக கடந்த போட்டியில் விளையாடவில்லை. மேலும் ஆல்-ரவுண்டர் கிறிஸ் மோரீசும் காயம் காரணமாக அணியில் இடம்பெறாத நிலையில், வரும் 10ம் தேதி நடைபெறவுள்ள சிஎஸ்கேவிற்கு எதிரான போட்டியில் அவர் விளையாடவுள்ளதாக அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

கிறிஸ் மோரீஸ் விளையாடுவார்

கிறிஸ் மோரீஸ் விளையாடுவார்

நேற்றைய போட்டியிலேயே மோரீஸ் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் விளையாடவில்லை. இந்நிலையில் அவர் சிஎஸ்கேவிற்கு எதிரான போட்டியில் விளையாடுவார் என்று கோலி கூறியுள்ளார். இந்த போட்டிக்கு இன்னும் 4 நாட்கள் உள்ள நிலையில், அவர் அதற்குள் தயாராகிவிடுவார் என்றும் கோலி நம்பிக்கை தெரிவித்தார்.

அணியின் வலிமை கூடும்

அணியின் வலிமை கூடும்

சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்காக விளையாடியுள்ள ஆல்-ரவுண்டர் கிறிஸ் மோரீஸ், கடந்த ஐபிஎல் ஏலத்தில் ஆர்சிபியால் 10 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் சிறப்பான வீரர் என்றும் அவரது வரவு அணிக்கு மேலும் வலிமையை கூட்டும் என்றும் விராட் கூறியுள்ளார்.

Story first published: Tuesday, October 6, 2020, 14:06 [IST]
Other articles published on Oct 6, 2020
English summary
Chris Morris taking fielding in their next match against Chennai Super Kings on October 10
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+