Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பயங்கரமான அனுபவம்.. நியூசி. தாக்குதலில் கடைசி நிமிடத்தில் தப்பிய வங்கதேச வீரர்கள்!

Recommended Video

மசூதிக்குள் துப்பாக்கி சூடு : நியூசிலாந்து பிரதமர் கண்டனம் -வீடியோ

கிறிஸ்ட்சர்ச் : நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரின் மசூதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் வங்கதேச கிரிக்கெட் வீரர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி உள்ளனர்.

மார்ச் 15, வெள்ளிக்கிழமை அன்று நியூசிலாந்து நேரப்படி மதியம் 1.45 மணி அளவில் கிறிஸ்ட்சர்ச் நகரின் மசூதி ஒன்றில் துப்பாக்கிச் சூடு நடந்தது.

கிறிஸ்ட்சர்ச் டெஸ்ட் போட்டி

கிறிஸ்ட்சர்ச் டெஸ்ட் போட்டி

அதே நகரில் மார்ச் 16 அன்று துவங்க உள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டிக்காக வங்கதேச வீரர்கள் ஹோட்டலில் தங்கி இருந்தனர். அவர்களில் சிலர் துப்பாக்கிச் சூடு நடைபெற்ற நேரத்தில் மசூதிக்கு சென்றுள்ளனர்.

தப்பித்தார்கள்

தப்பித்தார்கள்

மசூதிக்குள் அவர்கள் நுழையும் முன் துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது. துப்பாக்கிச் சூடு பற்றி அறிந்த சிலர் வங்கதேச வீரர்களை உள்ளே செல்ல வேண்டாம் என எச்சரித்ததால், அவர்கள் விரைவாக அறைக்கு திரும்பி தப்பியுள்ளனர்.

பாதுகாப்பாக உள்ளனர்

வங்கதேச கிரிக்கெட் போர்டு ட்விட்டரில் பதிவிட்டுள்ள செய்தியில், "கிறிஸ்ட்சர்ச் நகரில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுக்கு பின் அனைத்து வங்கதேச கிரிக்கெட் வீரர்களும் பாதுகாப்பாக ஹோட்டல் அறையில் தங்கி உள்ளனர். வங்கதேச கிரிக்கெட் போர்டு வீரர்களுடனும், நிர்வாகத்துடனும் நிலையான தொடர்பில் உள்ளது." என கூறியுள்ளது.

பயங்கரமான அனுபவம்

வங்கதேச வீரர் தமிம் இக்பால் தனது பதிவில், "மொத்த அணியினரும், துப்பாக்கிச் சூடு நடத்திக் கொண்டு இருந்தவர்களிடம் இருந்து தப்பி உள்ளோம். மிகவும் பயங்கரமான அனுபவம். எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்" என கேட்டுக் கொண்டுள்ளார்.

பெரும் அதிர்ஷ்டசாலிகள்

மற்றொரு வீரர் முஷ்பிகுர் ரஹீம் கூறுகையில், "கிறிஸ்ட்சர்ச் நகரில் மசூதியில் தாக்குதல் நடைபெற்ற போது, அல்லா இன்று எங்களை காப்பாற்றினார். நாங்கள் பெரும் அதிர்ஷ்டசாலிகள். இது போன்ற சம்பவங்களை மீண்டும் காண விரும்பவில்லை. எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்" என கூறியுள்ளார்.

வங்கதேச வீரர்களுக்கு குறி?

வங்கதேச வீரர்களுக்கு குறி?

நியூசிலாந்து மசூதி தாக்குதலுக்கு என்ன காரணம் என தெளிவாக தெரியாவிட்டாலும், இது வங்கதேச வீரர்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலா? என்ற சந்தேகமும் உள்ளது. அவர்கள் சில நிமிட இடைவெளியில் தான் உயிர் தப்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, March 15, 2019, 10:44 [IST]
Other articles published on Mar 15, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+