Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சச்சினிடம் கிளார்க் குசும்பு ... மூக்கை உடைத்த ஷேவாக்

டெல்லி: சச்சினிடம் குறும்பு செய்த ஆஸ்திரேலிய வீரர் மைக்கேல் கிளார்க்குக்கு ஷேவாக் மூக்கை உடைக்கும் வகையில் பதிலளித்தார்.

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் வீரேந்திர ஷேவாக் தனது பிறந்த நாளான அக்டோபர் 20-ம் தேதி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார்.

அதன் பின்னர் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்களை நினைவு கூர்ந்து வருகிறார். அந்த வகையில், அவர் சச்சினுடன் இணைந்து ஆஸ்திரேலியாவில் விளையாடியபோது கிளார்க் உடன் ஏற்பட்ட ஒரு சம்பவத்தை தற்போது நினைவு கூர்ந்துள்ளார்.

Clarke trolled by Shewag while trying to sledge Sacin

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியபோது, ஆஸ்திரேலிய வீரர் மைக்கேல் கிளார்க் அப்போது அணிக்கு புதிதாக வந்திருந்தார். அவர் சச்சின் டெண்டுல்கரை வெறுப்பேத்தும் விதமாக, 'உங்களுக்கு வயதாகிவிட்டது. இனி உங்களால் சிறப்பாக விளையாட முடியாது, பீல்டிங் செய்ய முடியாது' என்று கூறி தொடர்ச்சியாக டெண்டுல்கரை வெறுப்பேற்றிக் கொண்டிருந்தார்.

Clarke trolled by Shewag while trying to sledge Sacin

இதனைக் கவனித்து கொண்டிருந்த ஷேவாக், ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து கிளார்க்கிடம் உன்னுடைய வயது என்ன? என்று கேட்டார், அதற்கு கிளார்க் 23 வயது என்று கூறியிருக்கிறார். இதைக்கேட்ட ஷேவாக், உன்னுடைய வயதை விட சச்சின் அடித்த செஞ்சுரி அதிகம். அவரிடம் மரியாதையாக நடந்துகொள் என்று கூறி கிளார்க்கின் மூக்கை உடைத்ததாகக் கூறி இருக்கிறார்.

சபாஷ் சரியான அடிதான்!

Story first published: Sunday, November 1, 2015, 13:09 [IST]
Other articles published on Nov 1, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+