Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நியூசிலாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா

Shane Watson
நாக்பூர்: உலகக் கோப்பைக் கிரிக்கெட்டில் இன்று நடந்த போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா.

இன்று நாக்பூரில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து இடையிலான மோதல் நடந்தது. இந்த இரு அண்டை நாடுகளின் மோதல் இரு நாட்டு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

முதலில் பேட் செய்த நியூசிலாந்து 45.1 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்களையும் இழந்து 206 ரன்களில் சுருண்டது. மெக்கல் 62 ரன்களையும், கேப்டன் டேணியல் வெட்டோரி 4 ரன்களையும் சேர்த்தனர். மிட்சல் ஜான்சன் அபாரமாக பந்து வீசி 4 விக்கெட்களைச் சாய்த்தார். ஷான் டெய்ட் தன் பங்குக்கு 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

பின்னர் ஆட வந்த ஆஸ்திரேலியா 34 ஓவர்களில் 3 விக்கெட்களை மட்டும் இழந்து 207 ரன்களை எடுத்து வென்றது. ஷான் வாட்சன் சிறப்பாக ஆடி 62 ரன்களையும், பிராட் ஹாதின் 55 ரன்களையும் சேர்த்தனர். ஹமீஷ் பென்னட்டுக்கு 2 விக்கெட்கள் கிடைத்தன.

இன்றைய போட்டியில் பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலும் கலக்கி விட்டது ஆஸ்திரேலியா. தாங்கள் ஒரு சாம்பியன் அணி என்பதை அது எடுத்துக் காட்டியது. இந்த வெற்றி ரிக்கி பான்டிங்குக்கு ஒரு கேப்டனாக, உலகக் கோப்பையில் கிடைத்துள்ள 24வது தொடர் வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:44 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+