சாம்பியன்ஸ் லீக் டி20: முதல் அரையிறுதியில் இன்று கொல்கத்தா-ஹோபர்ட் அணிகள் பலப்பரிட்சை
ஹைதராபாத்: சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டியின் முதலாவது அரையிறுதியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ஆஸ்திரேலியாவின் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிகள் மோதுகின்றன.
சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டித்தொடரில் லீக் ஆட்டங்கள் முடிவுற்ற நிலையில், இன்று அரையிறுதி போட்டி நடைபெறுகிறது. ஹைதராபாத்தில் நடைபெறும் முதலாவது அரையிறுதி போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

அனைத்து போட்டியிலும் வெற்றி
ஐபிஎல் சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, சாம்பியன்ஸ் லீக்கில் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

தொடர்ந்து 13 வெற்றி
ஐபிஎல்லையும் சேர்த்தால், கொல்கத்தா அணி இதுவரை தொடர்ந்து 13 டி20 போட்டிகளில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. அரையிறுதியிலும் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு நுழையும் முனைப்பில் அந்த அணி உள்ளது.

இந்திய அணிகள்
மற்றொரு அரையிறுதி போட்டியில் சென்னை-பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. எனவே, இன்றைய போட்டியில், ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியை கொல்கத்தா வீழ்த்திவிட்டால், ஐபிஎல் அணிகளில் ஏதாவது ஒன்று மட்டுமே சாம்பியன்ஸ் லீக் கோப்பையை தூக்குவது உறுதியாகிவிடும்.

மாலை நடக்கிறது
கொல்கத்தா-ஹோபர்ட் அணிகள் மோதும் போட்டி, இந்திய நேரப்படி இன்று மாலை 4 மணிக்கு ஹைதராபாத் ராஜிவ்காந்தி ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.


Click it and Unblock the Notifications