For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டோணியின் சொந்த ஊரில் சன் ரைசர்ஸை வென்று பிரகாசிக்குமா சென்னை சூப்பர் கிங்ஸ்?

ராஞ்சி: சாம்பியன்ஸ் லீக் தொடரை சிறப்பான வெற்றி மூலம் தொடங்கியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் நாளை ராஞ்சியி்ல் நடைபெறும் தனது 2வது போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத்தை எதிர்கொள்கிறது.

ராஞ்சி, சென்னை அணியின் கேப்டன் டோணிக்குச் சொந்த ஊர் என்பதால் இந்தப் போட்டியிலும் சென்னை வெல்லும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

சென்னை அணி நல்ல பார்மில் இருப்பதால் அந்த அணியே வெல்லும் என்ற எதிர்பார்ப்பும் பொதுவாக உள்ளது.

கலக்கல் பேட்டிங்

கலக்கல் பேட்டிங்

சென்னை அணி தனது முதல் போட்டியில் சிறப்பான பேட்டிங் மூலம் பெரிய ஸ்கோரை சேஸ் செய்து டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது. இத்தனைக்கும் 185 என்ற பெரிய இலக்கை அது எளிதாக விரட்டி வென்றது.

அதேபோல நாளையும்

அதேபோல நாளையும்

அதேபோல நாளையும் தனது பேட்டிங் திறமை மற்றும் கூடவே பந்து வீச்சிலும் சிறந்து விளங்க சென்னை முயற்சிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்டிராங்கான பேட்டிங் வரிசை

ஸ்டிராங்கான பேட்டிங் வரிசை

டோணி, முரளி விஜய், சுரேஷ் ரெய்னா, டுபிளஸ்சிஸ், மைக் ஹஸ்ஸி, பிராவோ என சிறப்பான பேட்டிங் ஆர்டருடன் வலுவாக உள்ளது சென்னை.

வலுவான நிலையில் ரெய்னா, பிராவோ, ஹஸ்ஸி

வலுவான நிலையில் ரெய்னா, பிராவோ, ஹஸ்ஸி

மேலும் முதல் போட்டியில் ரெய்னா, பிராவோ, ஹஸ்ஸி ஆகியோர் நல்ல அடித்தளம் போட்டுக் கொடுத்ததும் குறிப்பிடத்தக்கது.

டோணி கலக்குவாரா

டோணி கலக்குவாரா

முதல் போட்டியில் டோணி ஜொலிக்கவில்லை. எனவே நாளைய போட்டியில் அவர் ஜொலிப்பாரா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

ஆல் ரவுண்டர்கள் ஏராளம்

ஆல் ரவுண்டர்கள் ஏராளம்

ஜடேஜா, அல்பி மார்க்கல், பிராவோ, ரெய்னா ஆகியோர் நல்ல ஆல்ரவுண்டர்களாகவும் உள்ளது சென்னைக்கு கூடுதல் பலமாகும்.

செமையான கேப்டன்

செமையான கேப்டன்

எல்லாவற்றையும் விட கேப்டன் டோணி என்பதுதான் சென்னைக்கு மிக முக்கியமான அம்சமாகும்.

பந்து வீச்சு சரியாக வேண்டும்

பந்து வீச்சு சரியாக வேண்டும்

முதல் போட்டியில் சென்னையின் பந்து வீச்சு சரியில்லை. குறிப்பாக, அஸ்வின், ஜடேஜா, பிராவோ, மொஹித் சர்மா ஆகியோர் நாளைக்கு நன்றாக செயல்பட்டால்தான் நல்லது.

சன்ரைசர்ஸும் சாமானியமில்லை

சன்ரைசர்ஸும் சாமானியமில்லை

அதேசமயம், சன்ரைசர்ஸ் அணியும் தனது முதல் போட்டியில் டிரினிடாட் டொபாகாவை வென்று வலுவானதாகவே திகழ்கிறது. குறிப்பாக அந்த அணியின் திஸரா பெரரா நல்ல பார்மில் உள்ளார்.

தவன் இருக்கிறார்

தவன் இருக்கிறார்

கேப்ட் ஷிகர் தவன், பார்த்திவ் படேல், டுமினி, சமி ஆகியோர் முதல் போட்டியில் ஜொலிக்காவிட்டாலும் கூட நாளைய போட்டியில் மெருகேற்ற முயல்வார்கள் என நம்பலாம்.

செமையான பந்து வீச்சு

செமையான பந்து வீச்சு

பந்து வீச்சைப் பொறுத்தவரை டேல் ஸ்டெயின், இஷாந்த் சர்மா, அமித் மிஸ்ரா ஆகியோர் உள்ளனர்.

Story first published: Wednesday, September 25, 2013, 17:47 [IST]
Other articles published on Sep 25, 2013
English summary
Brimming with confidence after a perfect start to their campaign, star-studded Chennai Super Kings will start as favourites against Sunrisers Hyderabad in a Groub B match of the Champions League Twenty20, on Thursday. Riding on its batting firepower, CSK successfully chased down a stiff target of 185 runs set by Titans with six wickets in hand to start their CLT20 campaign on a rousing note at JSCA International Stadium Complex.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+