Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

50,000 ரன்களைக் கடந்து சச்சின் புதிய சாதனை!

மும்பை: சச்சின் டெண்டுல்கரின் சாதனைப் புத்தகத்தில் நேற்று மேலும் ஒரு புதிய அத்தியாயம் இடம் பெற்றது. அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் அவர் 50,000 ரன்களை நேற்று கடந்தார்.

இதுவரை உலகத்தில் எந்த ஒரு கிரிக்கெட் வீரரும் படைக்காத புதிய சாதனை இது.

நேற்று மும்பை இந்தியன்ஸ், டிரினிடாட் டொபாகோ இடையிலான சாம்பியன்ஸ் லீக் போட்டியின்போதுதான் இந்த புதிய சாதனையை சச்சின் படைத்தார்.

35 ரன் எடுத்து 50,000 ரன்களைக் கடந்தார்

35 ரன் எடுத்து 50,000 ரன்களைக் கடந்தார்

நேற்றைய போட்டியில் சச்சின் விளையாடத் தொடங்கியபோது, 26 ரன்களை எடுத்தால் இந்த சாதனையைப் படைக்கலாம் என்ற நிலை இருந்தது. ஆனால் அந்த இலக்கையும் தாண்டி அவர் 31 பந்துகளில் 35 ரன்களைக் குவித்து, 50,000 ரன்களைத் தாண்டிப் போய் விட்டார்.

சில்வர் ஜூப்ளியை நெருங்கும் நிலையில்

சில்வர் ஜூப்ளியை நெருங்கும் நிலையில்

சச்சின் கிரிக்கெட் ஆட வந்து 25 ஆண்டுகள் ஆகவுள்ள நிலையில் 50,000 ரன்களை அவர் கடந்திருப்பது புதிய வரலாறும் ஆகும்.

953 போட்டிகள்

953 போட்டிகள்

டெஸ்ட், ஒரு நாள் போட்டி, டுவென்டி 20 என மொத்தம் 953 போட்டிகளில் இதுவரை சச்சின் ஆடியுள்ளார்.

50,009 ரன்கள்

50,009 ரன்கள்

அனைத்துப் போட்டிகளிலும் சேர்த்து மொத்தம் 50,009 ரன்களைக் குவித்துள்ளார்.

முதல் தர போட்டிகளில் மட்டும் 25,228 ரன்கள்

முதல் தர போட்டிகளில் மட்டும் 25,228 ரன்கள்

இதில் 307 முதல் தர போட்டிகளில் மட்டும் அவர் குவித்திருப்பது 25,228 ரன்களாகும். இந்த முதல் தரப் போட்டிகளில் 198 டெஸ்ட் போட்டிகளும் அடக்கம்.

198 டெஸ்ட்களில் 15,837 ரன்கள்

198 டெஸ்ட்களில் 15,837 ரன்கள்

டெஸ்ட் போட்டிகளில் அவர் எடுத்திருப்பது 15,837 ரன்களாகும்.

லிஸ்ட் ஏ போட்டிகளில் 21,999 ரன்கள்

லிஸ்ட் ஏ போட்டிகளில் 21,999 ரன்கள்

551 லிஸ்ட் ஏ போட்டிகளில் அவர் 21,999 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 463 ஒரு நாள் போட்டிகளும் அடக்கம்.

ஒரு நாள் போட்டிகளில் 18,426

ஒரு நாள் போட்டிகளில் 18,426

சச்சின் ஒரு நாள் போட்டிகளில் எடுத்துள்ள ரன்கள் 18,426 ஆகும்.

டுவென்டி 20 போட்டிகளில் 2747

டுவென்டி 20 போட்டிகளில் 2747

டுவென்டி 20 போட்டிகளில் சச்சின் 2747 ரன்களைக் குவித்துள்ளார்.

லீக் போட்டிகளில் சொதப்பல்

லீக் போட்டிகளில் சொதப்பல்

நடப்பு சாம்பியன்ஸ் லீக் போட்டிகளின் சுற்றுப் போட்டிகளில் சச்சின் சரியாகவே ஆடவில்லை. நான்கு போட்டிகளில் மொத்தமே அவர் 20 ரன்களைத்தான் எடுத்திருந்தார். நேற்றைய போட்டியில்தான் அவர் சற்றே நீண்ட நேரம் விளையாடி கொஞ்சம் போல கூடுதல் ரன்களைச் சேர்த்தார்... கடைசியில் அது சாதனைக்கு வித்திட்டது.

விரைவில் 200 டெஸ்ட் சாதனை

விரைவில் 200 டெஸ்ட் சாதனை

விரைவில் சச்சின் இன்னொரு புதிய சாதனையைப் படைக்கவுள்ளார். அது 200வது டெஸ்ட் ஆடிய சாதனை. மேற்கு இந்தியத் தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்யவுள்ளது. அப்போது தனது சாதனையை சச்சின் நிறைவேற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Sunday, October 6, 2013, 14:39 [IST]
Other articles published on Oct 6, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+