சாம்பியன்ஸ் லீக் 2வது அரை இறுதியில் மும்பை இந்தியன்ஸ்- டிரினிடாட் மோதல்!
டெல்லி: சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட்டின் 2வது அரை இறுதியில் ஐ.பி.எல். சாம்பியனான மும்பை இந்தியன்சும், மேற்கிந்திய தீவுகளின் டிரினிடாட் அண்ட் டொபாக்கோ அணியும் மோதுகின்றன.
பந்து வீச்சிலும் பேட்டிங்கிலும் சரி மும்பை இந்தியன்ஸும் டிரினிடாட்டும் சம பலத்துடன் இருக்கின்றன. இதனால் இன்றைய போட்டி விறுவிறுப்பாக இருக்கும்.
தொடர்ந்தும் சச்சின் டெண்டுல்கர் சரியாக விளையாடவில்லை. கடைசி போட்டியில் அவர் ஒரு ரன் கூட எடுக்கவில்லை.
இதனால் இந்த ஆட்டத்திலாவது சோபிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. டிரினிடாட் பவுலர் சுனில் நரின் சிக்கனமான பவுலராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அவர் தான் மும்பை பேட்ஸ்மேன்களுக்கு சிம்மசொப்பனமாக இருப்பார் என்று கருதப்படுகிறது.
Story first published: Saturday, October 5, 2013, 11:11 [IST]
Other articles published on Oct 5, 2013


Click it and Unblock the Notifications