Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சாம்பியன்ஸ் லீக்: கடைசி லீக்கில் இன்று சென்னை–டிரினிடாட் அணிகள் மோதல்

டெல்லி: சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் கடைசி லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் டிரினிடாட் அணியும் மோதுகின்றன.

10 அணிகள் இடையிலான சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்டில் இன்றுடன் லீக் சுற்று நிறைவு பெறுகிறது. இன்று இரவு டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் நடக்கும் கடைசி லீக்கில் சென்னை சூப்பர் கிங்சும், மேற்கிந்திய தீவுகளின் டிரினிடாட் அண்ட் டொபாக்கோ அணியும் மோதுகின்றன.

பலமான சென்னை அணி

பலமான சென்னை அணி

3 வெற்றியுடன் அரைஇறுதியை ஏற்கனவே உறுதி செய்து விட்ட பலம் வாய்ந்த சென்னை அணி வெற்றிப்பயணத்தை தொடரும் உத்வேகத்தில் தீவிரமாக இருக்கிறது. என்றாலும் அணியில் சில மாற்றங்கள் செய்யப்படலாம்.

பிளிஸ்சிஸ், மோரிஸ் களம் இறங்குகின்றனர்?

பிளிஸ்சிஸ், மோரிஸ் களம் இறங்குகின்றனர்?

இதுரை களம் இறங்காத பிளிஸ்சிஸ், கிறிஸ் மோரிஸ் ஆகியோருக்கு நாளை வாய்ப்பு அளிக்கப்படலாம்.

சவால் விடுக்கும் சுனில் நரின்

சவால் விடுக்கும் சுனில் நரின்

சென்னை பேட்ஸ்மேன்களுக்கு, டிரினிடாட்டின் சுழல் மன்னன் சுனில் நரின் கடும் சவாலாக இருப்பார் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.

அரை இறுதிக்குள் நுழையுமா டிரினிடாட் அணி

அரை இறுதிக்குள் நுழையுமா டிரினிடாட் அணி

தினேஷ் ராம்டின் தலைமையிலான டிரினிடாட் அணி 2 வெற்றி, ஒரு தோல்வி என்று 8 புள்ளிகளுடன் உள்ளது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் சிக்கலின்றி அரை இறுதியை எட்டிவிடலாம். மாறாக தோற்றால் டிரினிடாட் அணியும், தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த டைட்டன்ஸ் அணியும் தலா 8 புள்ளிகளுடன் சமநிலையில் இருக்கும். அப்போது ரன்ரேட் அடிப்படையில் இரண்டில் ஒரு அணி அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

மும்பை மோதல்

மும்பை மோதல்

முன்னதாக மாலை 4 மணிக்கு இதே மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் ரோகித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், சைமன் கேடிச் தலைமையிலான பெர்த் ஸ்கார்சர்ஸ் அணியும் சந்திக்கின்றன.

Story first published: Wednesday, October 2, 2013, 11:51 [IST]
Other articles published on Oct 2, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+