பத்து பேட்ஸ்மேன்களும் 'முட்டை' போட்டு புதிய சா(சோ)தனை படைத்த கிரிக்கெட் டீம்!
லண்டன்: 3 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 10 பேட்ஸ்மேன்கள் டக் அவுட் ஆன புது சா(சோ)தனையை படைத்துள்ளது இங்கிலாந்து உள்ளூர் கிரிக்கெட் டீம்.
இங்கிலாந்து நாட்டின் உள்ளூர்
கிரிக்கெட் அணிகளான ஹஸ்லிங்டன் அணியும், டென் விர்ரல் அணியும் மோதிய ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. செஸ்சையர் லீக் போட்டிகளுக்காக இவ்விரு அணிகளும் பலப்பரிட்சை நடத்தின. முதலில் பேட்டிங் செய்த ஹஸ்லிங்டன் அணி நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களில் 108 ரன்களை எடுத்தது. 109 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இரண்டாவதாக ஆடவந்தது டென் விர்ரல் அணி.

நடையை கட்டினர்
ஆனால் அவர்கள் வாழ்நாளில் இப்படி ஒரு பந்தையத்தை பார்த்தது கிடையாது என்பதை அப்போது அவர்கள் உணரவில்லை. எதிரணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வந்தவர்கள் எல்லாம் வரிசையாக நடையை கட்ட ஆரம்பித்தனர். அவர்கள் மட்டையில் பட்டு ஒரு ரன் கூட எடுக்கவில்லை. காலில் பட்டு கிடைத்த 2 ரன் மட்டுமே அந்த அணிக்கு வந்து சேர்ந்தது.

மானங்காத்த மாவீரன்
பதினோராவது பேட்ஸ்மேனாக களமிறங்கிய குன்னூர் ஹோப்சன் மட்டுமே மானத்தை காக்க ஒரு ரன்னை அடித்தார். ஆகமொத்தமாக மூன்றே ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படு பரிதாபமாக தோற்றது அந்த அணி.

இரண்டே பவுலர்
எதிரணியில் பென் இஸ்டட் ஆறு விக்கெட்டுகளையும், டோம் கிளட்ஹில் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். அதாவது இரண்டே பவுலர்கள் எதிரணி மொத்தத்தையும் வாரி சுருட்டினர்.

அதுக்குள்ளேயா..
7வது வீரராக களமிறங்கிய மேத் காரட் பிபிசிக்கு அளித்த பேட்டியில்,
"நான் 3விக்கெட் வீழ்ந்தபோது காலுக்கு பேடுகளை கட்ட ஆரம்பித்தேன். அதை முடித்துவிட்டு அறையில் இருந்து வெளியே வருவதற்குள் 7 விக்கெட் போயிருந்தது" என்று தனது அங்கலாய்ப்பை தெரிவித்துள்ளார்.

மோசத்திலும் மோசமில்லை..
10 பேட்ஸ்மேன்கள் முட்டை போட்டு மூன்றே ரன்களில், ஆல் அவுட் ஆனாலும், இது ஒன்றும் மிக மோசமான ஆட்டம் கிடையாதாம். இதைவிட படுகேவலமாக மண்ணை கவ்விய அணிகளும் உள்ளன. 1913ல் நடந்த ஆட்டத்தில் சோமர்செட் கிளப் அணி, கிளாஸ்டோன்பரியுடனான ஆட்டத்தில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஒரு ரன் கூட எடுக்கவில்லை.
முதல்தர கிரிக்கெட்டை பொறுத்தளவில் குறைந்தபட்ச ஸ்கோர் 6. இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில், தி பிஎஸ் அணி இந்த ஸ்கோரை எட்டியிருந்தது. டெஸ்ட் பந்தையங்களில் குறைந்த ஸ்கோர் அடித்த மோசமான சாதனைக்கு சொந்தக்கார அணி நியூசிலாந்து. கடந்த 1955ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்த ரன்னை அது அடித்திருந்தது.


Click it and Unblock the Notifications