முதல்வர் ஸ்டாலினை கவர்ந்த 2 தமிழக கிரிக்கெட் வீரர்கள்..என்ன நடந்தது?
சென்னை; தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், தாம் ஒரு கிரிக்கெட் ரசிகர் என்று பல முறை தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற சி.எஸ்.கே. பாராட்டு விழாவில் கூட , தமக்கு கிரிக்கெட் எவ்வளவு பிடிக்கும் என்பதை கூறியிருந்தார்
Recommended Video
சென்னையின் மேயராக இருந்த போது கார்கில் போருக்காக நிதி திரட்ட நடைபெறவிருந்த கிரிக்கெட் போட்டியிலும் ஸ்டாலின் பங்கேற்றார்.
ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகரான ஸ்டாலின், தற்போது 2 தமிழக கிரிக்கெட் வீரர்களை பார்த்து ரசித்துள்ளார்.

சாம்பியன்
நடந்து முடிந்த சையது முஸ்தாக் அலி கோப்பையை தமிழக அணி தொடர்ந்து 2வது முறையாக வென்றுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற கர்நாடகா அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் தமிழக அணி வெற்றி பெற கடைசி பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் ஷாரூக் கான் கடைசி பந்தை சிக்சருக்கு விளாசி கோப்பையை கைப்பற்றி தந்தார்.

வாழ்த்து
'தமிழக அணி சாம்பியன் பட்டம் வென்றதை ரசிகர்கள் கொண்டாடிய நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து செய்தி ஒன்றை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், சையது முஸ்தாக் அலி தொடரில் தொடர்ந்து 2வது முறையாக வாகை சூடியிருக்கும் தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்கு என்னுடைய வாழ்த்துகள்! என்று குறிப்பிட்டுள்ளார். ஷாருக் கான், சாய் கிஷோர் உள்ளிட்ட இளம் திறமையாளர்கள் சிறப்பான - துடிப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். எல்லோரும் மேலும் உயரங்களை அடைய வாழ்த்துகிறேன் என்று அவர் பாராட்டியுள்ளார்

ஷாரூக்கான்
முதலமைச்சரின் வாழ்த்து செய்தியை சற்றும் எதிர்பாராத ஷாரூக்கான், அனைவரின் வாழ்த்துக்களுக்கும், அன்புக்கும் நன்றி. இது என் வாழ்நாளில் சந்தோணமான நாட்களில் ஒன்று. இது போன்ற போட்டியில் அணிக்கு வெற்றி தேடி தந்தது மகிழ்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார்.

இந்திய அணியில் இடம்?
ஷாரூக்கானின் இந்த அதிரடி ஆட்டத்தை அஸ்வின், பத்ரிநாத் உள்ளிட்ட வீரர்கள் பாராட்டியுள்ளனர். மேலும் பொலார்ட் போல் அதிரடி ஆட்டத்தை விளையாட கூடிய ஷாரூக்கானை விரைவில் இந்திய அணியில் வாய்ப்பு வழங்கி,அவரது திறமையை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications