கோலிக்கு இப்படி ஆவார்ன்னு நான் நினைச்சே பாக்கல..! உண்மையை சொல்லும் பிரபல பயிற்சியாளர்
Recommended Video
மும்பை: கேப்டன் விராட் கோலி உலகின் மிகச் சிறந்த பேட்ஸ்மேனாவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை என்று பிரபல பயிற்சியாளர் டேவ் வாட்மோர் புகழாரம் சூட்டி இருக்கிறார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: மற்றவர்களை காட்டிலும் கோலி ஒரு அற்புதமான வீரர். மற்ற கேப்டன்களை ஒப்பிடும்போது மைதானத்தில் மிகவும் அதிக ஆர்வத்தை வெளிப்படுத்தும் நபர்.

அவர் 19 வயதுக்குட்பட்ட அணியில் இருந்த போதே அப்படித்தான் இருந்தார். தமது தலைமையிலான அணிக்கு தானே முன்மாதிரியாக இருந்து வழிநடத்துபவர். விளையாடும்போது கீழே விழுந்து காயம் ஏற்பட்டாலும், ரத்தம் வழிந்தாலும், அதைப் பொருட்படுத்தாமல் விளையாடுபவர்.
பயிற்சியின்போது கூட 100 சதவிகிதம் உழைப்பை கொட்டும் ஒரே வீரர். அவர் முதல் தரப் போட்டிகளில் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தபோது கூட உலகின் மிகச் சிறந்த பேட்ஸ்மேனாவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அனைத்தையும் கோலி தன் முயற்சியால் மாற்றியிருக்கிறார்.
அவர் எப்போது உடல்தகுதி தான் முக்கியம் என முடிவெடுத்தாரோ, அன்றிலிருந்து அவருடைய கிரிக்கெட் வாழ்க்கை புதிய பாதையில் பயணிக்கத் தொடங்கி விட்டது. அவரின் இந்த முடிவே அவருடைய வாழ்க்கையின் திருப்புமுனை என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications