ஒரேயொரு போட்டோ…!! இந்திய அணியின் மானத்தை கப்பலேற்றிய ரவி சாஸ்திரி..! கொதிக்கும் ரசிகர்கள்
Recommended Video
சவுதாம்ப்டன்: தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான உலக கோப்பை தொடரில் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இரண்டு பெண்களோடு போட்டோ எடுத்துக் கொண்டது பெரும் சர்ச்சையாக வெடித்திருக்கிறது. அதை கண்ட நெட்டிசன்கள் ஏகத்துக்கும் வறுத்து தள்ளிவிட்டனர்.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் தொடங்கி உள்ள உலக கோப்பை கிரிக்கெட் தொடர், கொஞ்சம் விறுவிறுப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. ஒரு வாரம் கடந்த நிலையில் நேற்று தென் ஆப்ரிக்காவுடன் தமது முதல் போட்டியில் இந்தியா விளையாடியது.
அதில் இந்திய அணி, தென் ஆப்ரிக்க அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தியது. போட்டியில் வெற்றி பெற்றதால் இந்திய ரசிகர்கள் ஆனந்த கூத்தாடினர். முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதால் உலக கோப்பை இந்தியாவுக்கு தான் என்று உற்சாக குரல் எழுப்பினர்.

கொண்டாட்டம்
போட்டி நடைபெற்ற மைதானத்துக்கு வெளியே, ரசிகர்கள் திரண்டு கொண்டாடி மகிழ, அதற்கு சில மணி நேரங்கள் முன்பாக.... அதாவது போட்டி நடைபெற்று கொண்டிருக்கும் போதே பயிற்சியாளர் ரவி சாஸ்திரி செய்த செயல் இந்தியாவுக்கு அவப்பெயரை ஏற்படுத்தி இருக்கிறது.

வைரல் போட்டோ
அதாவது... போட்டிக்கு முன்பாக இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, 2 பெண்களோடு எடுத்துக்கொண்ட போட்டோ சமூக வலை தளத்தில் வைரலானது. இந்த போட்டோவைப்பார்த்த ரசிகர்கள், இது தான் இந்திய கிரிக்கெட் அணியின் உலகக்கோப்பை பயிற்சியா? என்று கொந்தளித்து விட்டனர். ஐபிஎல்லில் இருந்து மீண்டு வரவில்லை என்றும் கருத்தும் காட்டமாக கூறி இருக்கின்றனர்.
பயிற்சி அற்புதம்
அதில் ஜாய் ஹின்டிங்ஸ் என்பவர், இந்திய அணியின் உலக கோப்பை பயிற்சி அற்புதமாக இருக்கிறது என்று பொங்கி இருக்கிறார். மற்றொருவரோ, இந்திய கிரிக்கெட் அணியின் உலகக்கோப்பை பயிற்சி சிறப்பாக போகிறது என்று நக்கலடித்துள்ளார்.
நல்லவேளை.. டீமில் இல்லை
மற்றொருவர்... அதனால் தான் அவர்கள் செய்தியாளர்களின் சந்திப்புகளை தவிர்க்கின்றனர் என்று குறிப்பிட்டு இருக்கிறார். அதிலும் மற்றொருவரோ... நல்ல வேளை.. ஆடும் 11 பேர் கொண்ட அணியில் அவர் இல்லை என்று கூறியிருக்கிறார்.
வித்தியாசம் என்ன?
இந்த போட்டோவில் இருக்கும் ரவி சாஸ்திரிக்கும், இந்திய அணிக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாக தெரியவில்லை என்று ஒருவர் கிழித்து தொங்கவிட்டுள்ளார். அடுத்து வரக்கூடிய செய்தியாளர்கள் சந்திப்பில், அவருக்காக கடுமையான கேள்விகள் காத்திருக்கின்றன என்று மற்றொருவர் கூறியிருக்கிறார்.
ஐபிஎல் நினைப்பு
நாங்க எல்லா பக்கமும் நல்லா விளையாடுவோம்... கிரெண்டுலயும் சரி, மற்ற இடத்திலேயும் சரி.. இது மற்றொருவரின் கருத்து. இன்னும் ஐபிஎல் நினைப்பில் தான் ரவி சாஸ்திரி இருக்கிறார் என்று மேலும் ஒரு ரசிகர் ஒரு காட்டு காட்டியிருக்கிறார். ஒட்டு மொத்தத்தில் இந்திய அணியின் பெயரையும், வெற்றி கொண்டாட்டத்தையும் ஒரேயொரு போட்டோவில் கப்பலேற்றி.. மானத்தை வாங்கி இருக்கிறார் ரவி சாஸ்திரி.


Click it and Unblock the Notifications