கிரிக்கெட் விளையாட்டில் விபரீதம்-பந்து தலையில் அடித்து மாணவர் சாவு
ஈரோடு:
கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது பந்து தலையில் பட்டதில் கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.
ஈரோடு மாவட்டம் தாராபுரம், காந்திபுரத்தில் வசித்து வருபவர் கார்த்திக். டெய்லரான இவரது மகன் நாகராஜ். கல்லூரியில் படித்து வந்தார்.
ஞாயிற்றுக்கிழமை தனது நண்பர்களுடன் உடுமலை சாலையில் உள்ள மைதானத்தில் கிரிக்கெட் விளையாடச் சென்றார் நாகராஜ். அப்போது பேட்டிங் செய்த நாகராஜ், ஒரு பந்தை ஓங்கி அடிக்க முயன்றார். ஆனால் பந்து அவரது தலையில் வேகமாக வந்து மோதியது.
இதில் நிலைகுலைந்த நாகராஜ், அப்படியே சுருண்டு விழுந்து மயங்கினார். உடனடியாக அவரது நண்பர்கள் நாகராஜை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பெற்றோருக்கும் தகவல் கொடுத்தனர்.
பின்னர் கோவை அரசு மருத்துவமனைக்கு நாகராஜ் கொண்டு செல்லப்பட்டார். அஙகு பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.
Story first published: Wednesday, December 7, 2011, 17:29 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications