இலங்கை தொடரிலும் விளையாடும் வானிலை.. முதல் போட்டிக்கு சிக்கல்.. டாஸ் வென்றால் இந்தியா என்ன செய்யும்?
கொழும்பு: இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பெரும் சிக்கலை உருவாக்க காத்துள்ளது வானிலை.
Recommended Video
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று தொடங்குகிறது.
கடந்த ஜூலை 13ம் தேதியே நடக்கவிருந்த இந்த போட்டி கொரோனா பாதிப்பு காரணமாக ஜூலை 18ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

முதல் ஒருநாள் போட்டி
20 பேர் கொண்ட ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணியில் 6 வீரர்கள் தங்களது முதல் சர்வதேச போட்டியில் விளையாடுகின்றனர். 14 வீரர்கள் ஏற்கனவே சர்வதேச அனுபவம் பெற்றவர்கள் என்பதால் பலமான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. மறுபுறம் இலங்கை அணி முக்கிய வீரர்கள் இன்றி பலவீனமாக உள்ளது. சமீபத்தில் நடைபெற்ற இங்கிலாந்து தொடரில் படுமோசமான தோல்வியை சந்தித்தது.

வானிலை நிலவரம்
இந்நிலையில் இந்த போட்டியில் மழை பெரும் அளவில் விளையாடும் என தகவல் வெளியாகியுள்ளது. இன்று காலை நிலவரப்படி, போட்டி நடைபெறும் கொழும்பு நகரத்தில் வானிலை சற்று மோசமாக இருப்பதாகவும் பிற்பகலில் அடிக்கடி மழை குறுக்கிட்டு ஆட்டம் பாதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டாஸ் கணிப்பு
வானிலையை கருத்தில் கொண்டு டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தான் தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் மாலை நேரங்களில் மழை குறுக்கிட்டுவிட்டால், பந்துவீச்சாளர்களுக்கு சவாலாக விளங்கும். இந்திய அணி 3 ஸ்பின்னர்களுடன் களமிறங்க திட்டமிட்டுள்ளது. எனவே முதல் இன்னிங்ஸின் போது பிட்ச் ஓரளவுக்கு வறண்டு இருக்கும் என்பதால் முதலில் பவுலிங்கை தான் இந்திய அணி தேர்வு செய்ய வேண்டும்.

பந்துவீச்சு திட்டம்
டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் போதும் மழையின் குறுக்கீடு இந்திய அணிக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. முக்கியமாக, இந்தியாவின் பவுலிங் திட்டம் தோல்வியடைந்தது. எனவே இந்த முறை சற்று முன்னெச்சரிக்கையாக வானிலைக்கு ஏற்றவாறு பந்துவீச்சில் மாற்றங்கள் கொண்டு வரப்படவேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Click it and Unblock the Notifications