Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தள்ளிப்போன IND vs SL தொடர்.. "உன் வேலையும் வேணா, சம்பளமும் வேணா" - கடுப்பான மைதான ஊழியர்கள்

இந்திய - இலங்கை அணிகள் இடையேயான ஒருநாள் மற்றும் டி20 போட்டித் தொடர் அட்டவணை மாற்றப்பட்டுள்ள நிலையில், மைதானத்தை மீண்டும் தயார் செய்வதில் சிக்கல் எழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் ஷிகர் தவான் தலைமையிலான இந்திய ஏ அணி, அங்கு மூன்று டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது.

விராட் கோலி தலைமையிலான மெயின் அணி இங்கிலாந்தில் விளையாடி வருவதால், இந்திய 20 வீரர்கள் கொண்ட 'ஏ' அணியை இலங்கைக்கு அனுப்பியுள்ளது பிசிசிஐ.

ப்ரேமதசா ஸ்டேடியம்

ப்ரேமதசா ஸ்டேடியம்

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையே 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறவிருக்கிறது. ஜூலை 13ம் தேதி முதல் ஒருநாள் போட்டி தொடங்குவதாக இருந்தது. 2 மற்றும் 3வது ஒரு நாள் போட்டி ஜூலை 16, 18 தேதிகளில் நடைபெறுவதாக இருந்தது. மேலும் டி20 போட்டிகள் ஜூலை 21, 23 மற்றும் 25ம் தேதிகளில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்த போட்டிகள் அனைத்து கொழும்புவில் உள்ள ப்ரேமதசா மைதானத்தில் நடைபெறவுள்ளது.

கோச் டிராவிட்

கோச் டிராவிட்

இந்த தொடருக்கான இந்திய 20 பேர் கொண்ட இந்திய அணிக்கு ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதே போல புவனேஷ்வர் குமார் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அணியில் ஷிகர் தவான் ( கேப்டன்), பிரித்வி ஷா, தேவ்தத் பட்டிக்கல், ருத்ராஜ் கெயிக்வாட், சூர்யகுமார் யாதவ், மணிஷ் பாண்டே, ஹர்திக் பாண்ட்யா, நிதிஷ் ராணா, இஷான் கிஷான் ( கீப்பர்), சஞ்சு சாம்சன் ( விக்கெட் கீப்பர்), யுவேந்திர சாஹல், ராகுல் சஹார், கிருஷ்ணப்பா கவுதம், க்ருணால் பாண்ட்யா, குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, புவனேஷ்வர் குமார் ( துணை கேப்டன்), தீபக் சஹார், நவ்தீப் சைனி, சேட்டன் சக்காரியா ஆகிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் என்பது குறிப்பிடத்தக்கது.

வாரியம் அதிர்ச்சி

வாரியம் அதிர்ச்சி

இந்நிலையில், இலங்கை அணியில் அதன் பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட் ஃபிளவர் மற்றும் அந்த அணியின் டேட்டா அனலிஸ்ட் நிரோஷன் ஆகிய இருவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் இங்கிலாந்து தொடரை முடித்துக் கொண்டு இலங்கை திரும்பிய அந்த அணி வீரர்கள் தற்போது தனிமைபப்டுத்தப்பட்டுள்ள நிலையில், இங்கிலாந்தில் இருந்து வந்த பயிற்சியாளர் மற்றும் டேட்டா அனலிஸ்ட் ஆகிய இருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

போட்டித் தேதிகள் மாற்றம்

போட்டித் தேதிகள் மாற்றம்

எனினும், முதல் கட்ட சோதனையில் வீரர்கள் எவருக்கும் கொரோனா உறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் கொரோனா கன்ஃபார்ம் ஆகியிருக்கும் சூழலில், அடுத்தக்கட்ட சோதனையில் வீரர்கள் சிலருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது. இதனால், ஜுலை 13ம் தேதி தொடங்கவிருந்த இலங்கை தொடருக்கான போட்டி அட்டவணை மாற்றப்பட்டுள்ளதாக பிசிசிஐ தலைவர் கங்குலி அறிவித்துள்ளார். அதன்படி, ஒருநாள் போட்டிகள் ஜுலை 13ம் தேதி தொடங்கவிருந்த ஒருநாள் போட்டிகள், ஜுலை 18ம் தேதி தொடங்கவுள்ளது.

முதல் ஒருநாள் போட்டி - ஜுலை 18

இரண்டாவது ஒருநாள் போட்டி - ஜுலை 20

மூன்றாவது ஒருநாள் போட்டி - ஜுலை 23

முதல் டி20 போட்டி - ஜுலை 25

இரண்டாவது டி20 போட்டி - ஜுலை 27

மூன்றாவது டி20 போட்டி - ஜுலை 29

ஆகிய தேதிகளை போட்டிகள் மாற்றப்பட்டுள்ளது.

ஊதிய பாக்கி சிக்கல்

ஊதிய பாக்கி சிக்கல்

இந்நிலையில், போட்டிக்கான தேதிகள் மாற்றப்பட்டதில், மைதான பராமரிப்பாளர்கள் கடுப்பாகி போர்க்கொடி தூக்கியிருப்பதாக தெரிகிறது. போட்டிகள் அனைத்தும் பிரேமதாசா மைதானத்தில் தான் நடைபெறுகிறது. இதற்காக கடந்த சில நாட்களாகவே ஊழியர்கள் மைதானத்தை தயார் செய்யும் விதமாக தீவிரமாக இரவு பகல் பாராமல் பணியாற்றி வந்ததாக தெரிகிறது. இப்போது போட்டி அட்டவணை மாற்றப்பட்டு, மீண்டும் 5 நாட்கள் தள்ளி நடத்தப்படுவதால் அவர்கள் கொந்தளித்துவிட்டார்களாம். ஏற்கனவே, அவர்களில் பலருக்கு ஊதிய பாக்கி பிரச்சனை இருப்பதாக கூறப்படுகிறது. வீரர்களும் வருமான பிரச்சனையில் அல்லல்பட, தொழிலாளர்களும் இதே சிக்கலில் இருந்திருக்கின்றனர். இந்நிலையில், போட்டித் தேதிகள் மாற்றப்படுவதால், மீண்டும் பிட்சை மெய்ன்டெய்ன் பண்ணுவது, தயார் செய்வது என ஏகப்பட்ட சிக்கல் இருப்பதால் கடும் அதிருப்தியில் உள்ளார்களாம்.

Story first published: Saturday, July 10, 2021, 16:21 [IST]
Other articles published on Jul 10, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+