Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்ன மறுபடியும் கம்பேக்கா.. பேட்டை தூக்கிட்டு எங்க போகிறார் பாருங்க யுவராஜ் சிங்..ஓ இதுதான் பிளானா!

பஞ்சாப்: இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் யுவராஜ் சிங் தற்போது சையது முஸ்டாக் கோப்பை போட்டிக்கான பஞ்சாப் அணியில் சேர்க்கப்பட்டு உள்ளார்.

அடுத்த வருட தொடக்கத்தில் முதல தர டி 20 தொடரான சையது முஸ்டாக் அலி கோப்பை போட்டி நடக்க உள்ளது. இந்த போட்டிக்காக ஒவ்வொரு மாநில அணிகளும் தங்கள் மாநில வீரர்களை தேர்வு செய்து உள்ளது.

பல்வேறு மாநில அணிகள் இன்னும் வீரர்களை தேர்வு செய்யும் பணியில் உள்ளது. ஐபிஎல் 2021 தொடருக்கு முன் இந்த சையது முஸ்டாக் கோப்பை போட்டி நடக்க உள்ளதால் இதில் வீரர்கள் தங்கள் திறமையை நிரூபிக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

யுவராஜ் சிங்

யுவராஜ் சிங்

இந்த நிலையில்தான் இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் யுவராஜ் சிங் தற்போது சையது முஸ்டாக் கோப்பை போட்டிக்கான பஞ்சாப் அணியில் சேர்க்கப்பட்டு உள்ளார். பஞ்சாப் அணியின் 30 பேர் கொண்ட முதல் கட்ட வீரர்கள் குழுவில் இவர் பெயர் இடம்பெற்றுள்ளது. இறுதி பட்டியல் இன்னும் சில நாட்களில் வெளியாகும்.

ஏன்

ஏன்

கிரிக்கெட் போட்டிகளில் இருந்து யுவராஜ் சிங் ஓய்வு பெற்றுள்ள நிலையில் அவரின் பெயர் பஞ்சாப் அணியில் இடம்பெற்று இருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது. இதை விட இன்னொரு ஆச்சர்யம் என்னவென்றால், பஞ்சாப் அணி வீரர்களுடன் யுவராஜ் சிங் இப்போதே பயிற்சியை தொடங்கிவிட்டார்.

தீவிரமாக பயிற்சி

தீவிரமாக பயிற்சி

யுவராஜ் சிங் தற்போது தீவிரமாக வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். சையது முஸ்டாக் அலி கோப்பைக்கு தயாராகும் மற்ற வீரர்கள் உடன் இவர் தங்கி உள்ளார். ஆனால் இவர் ஏற்கனவே ஓய்வு பெற்றுவிட்டார் என்பதால் சையது முஸ்டாக் அலி கோப்பையில் ஆட முடியுமா என்று கேள்வி எழுந்துள்ளது.

சர்ச்சை

சர்ச்சை

அதேபோல் கனடாவில் நடந்த குளோபல் டி 20 லீக் போட்டிகளிலும் இவர் ஆடி உள்ளார். பிசிசிஐ விதிப்படி இந்திய வீரர் வெளிநாட்டு தொடரில் ஆடிவிட்டால் மீண்டும் பிசிசிஐ நடத்தும் போட்டி எதிலும் ஆட முடியாது. இதனால் யுவராஜ் சிங் சையது முஸ்டாக் அலி கோப்பை போட்டியில் ஆட வாய்ப்பு குறைவு என்கிறார்கள்.

பயிற்சி

பயிற்சி

இவர் பஞ்சாப் அணியின் ஆலோசகராக மாற முயன்று கொண்டு இருக்கிறார். பயிற்சி குழுவில் இணைவதற்கான திட்டங்களை எடுத்து வருகிறார். அதன் பொருட்டே இப்படி மீண்டும் பயிற்சி மேற்கொண்டுள்ளார். இளைஞர்களுக்கு வழிகாட்டியாக வேண்டும் என்று யுவராஜ் சிங் திட்டமிட்டுள்ளார்.. இதுதான் இவர் மீண்டும் ஆக்டிவாக காரணம் என்கிறார்கள்.

2021

2021

பிசிசிஐ அனுமதித்தால் இவர் முதல் தர போட்டிகளில் தொடர்ந்து ஆடும் திட்டத்தில் இருக்கிறார். 2021ல் நடக்க உள்ள ஐபிஎல் தொடருக்கு இவர் குறி வைத்துள்ளார் என்கிறார்கள். இந்த தொடரில் பஞ்சாப் அணி அல்லது வேறு ஏதாவது ஒரு அணிக்கு ஆலோசகராக செல்ல வேண்டும் என்று யுவராஜ் சிங் நினைக்கிறார். இதன் பொருட்டே யுவராஜ் சிங் இப்போது காலத்திற்கு கம்பேக் கொடுத்துள்ளார்.

Story first published: Tuesday, December 15, 2020, 15:16 [IST]
Other articles published on Dec 15, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+