Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அஸ்வின் செய்த “டிங்கினி பிட்டி கில்லேடி”.... வர்ணனையில் வீடு கட்டிய நம்ம ஸ்ரீகாந்த்

Recommended Video

IPL 2019: ஒரே ஒரு அவுட்... சர்ச்சையில் சிக்கிய அஸ்வின்- வீடியோ

சண்டிகர்: பஞ்சாப், ஹைதராபாத் அணிகளுக்கு எதிரான போட்டியில் அஸ்வின் செய்த ரன் அவுட்டுக்கு புதிய பெயர் சூட்டினார் வர்ணனையாளர் ஸ்ரீகாந்த்.

ஐபிஎல் தொடரின் 22 ஆவது போட்டி மொகாலி மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியும், புவனேஷ்வர் குமார் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணியும் களம் கண்டன.

போட்டியில் முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய சன் ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்களை அடித்தது. அதனால் பஞ்சாப் அணிக்கு 151 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

சன் அணி சார்பில் துவக்க வீரரான டேவிட் வார்னர் இறுதிவரை ஆட்டம இழக்காமல் 62 பந்துகளில் 70 ரன்களை அடித்தார். இதில் 6 பவுண்டரிகளும் ஒரு சிக்சரும் அடங்கும்.

கலக்கல் ரசிகர்கள்

கலக்கல் ரசிகர்கள்

வழக்கமாக... ரசிகர்கள் தான்... மைதானத்தில் விதம், விதமாக கலக்குவார்கள். தங்கள் அணி வெற்றி பெற வேண்டும் என்று வேண்டுவார்கள். இது ரசிகர்களின் தரப்பில் என்றால்.. தற்போது வர்ணனையாளர்களின் பேச்சுகள் அதற்கு மேலே.

வசீகரிக்கும் வர்ணனை

வசீகரிக்கும் வர்ணனை

அதிலும் குறிப்பாக முன்னாள் வீரர் ஸ்ரீகாந்தின் வர்ணனையை ரசிக்க ஒரு கூட்டமே காத்திருக்கும். தொலைக்காட்சியில் போட்டியை பார்க்கும் ரசிகர்களுக்கு அவரின் பேச்சு என்பதே ஒரு ஜாலிதான்.

சூப்பர் ஸ்பெஷல்

சூப்பர் ஸ்பெஷல்

மிக அருமையாக... நம்ம ஊர் பாஷையான சென்னை தமிழில் அவர் புகுந்து விளையாடுவது தான் சூப்பர் ஸ்பெஷல். களத்தில் ஏதேனும் ஒரு வீரர் கேட்சை கோட்டை விட்டாலோ அல்லது ரன்களை எடுக்க சிக்சர் அடித்தாலோ தானே ஒரு ரசிகராக மாறி துள்ளிக் குதித்து வர்ணனை செய்வார்.

பஞ்சாப் போட்டியில் வர்ணனை

பஞ்சாப் போட்டியில் வர்ணனை

ஒவ்வொரு போட்டியிலும் ஏதேனும் ஜாலியாக பேசும் அவரது வர்ணனைக்கு ஏக மவுசு. பஞ்சாப், ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியில் ஸ்ரீகாந்தின் வர்ணனை சூப்பரோ... சூப்பர்.

அஸ்வின் பந்துவீச்சு

அஸ்வின் பந்துவீச்சு

14வது ஓவரில் அவரின் வர்ணனையே ஒரு கலக்கலாக தான் இருந்தது. அந்த ஓவரை வீசியது (ஆளப்போறான் தமிழன்) அஸ்வின். பந்தை எதிர்கொண்ட வார்னர் அதை அடிக்க... நேராக பந்து அஸ்வினின் கைக்கு வந்தது.

நபி ரன் அவுட்

நபி ரன் அவுட்

அதை அவர் பிடிக்க முயன்ற போது... கையில் பட்டு பந்து கீழே விழுந்தது. அதை கவனிக்காத முகமது நபி ரன் என்று நினைத்து கொண்டு வார்னர் இருந்த திசை நோக்கி நகர முயல்கிறார். இந்த வாய்ப்பை பயன்படுத்தி ரன் அவுட் செய்கிறார் அஸ்வின்.

டங்கினி பிட்டி கில்லேடி

டங்கினி பிட்டி கில்லேடி

அரங்கமே ஒரு கணத்தில் அதிர்ந்து.... அந்த விக்கெட்டுக்காக கைகளை தட்டி ஆர்ப்பரித்தது. அப்போது வர்ணனையாளர் தரப்பில் இருந்த ஸ்ரீகாந்தின் அறிவிப்பு சூப்பர். இந்த அவுட்டுக்கு என்ன பெயர் தெரியுமா என்று குஷியான அவர்.. டிங்கினி பிட்டி கில்லேடி என்று கூறி... அஸ்வினை பாராட்டினார்.

பாராட்டும் ரசிகர்கள்

பாராட்டும் ரசிகர்கள்

அதே நேரத்தில் இறுதி கட்ட ஓவர்களில் பஞ்சாப் வீரர்கள் இருந்தனர். அப்போதும் சும்மா புகுந்து விளையாடினார் ஸ்ரீகாந்த். ஒக்கட்டி ஒன்று.. ரெக்கட்டி ரெண்டு என்ற அவரின் வர்ணனைக்கு ஏக பாராட்டுகள் கிடைத்தன என்றே சொல்லலாம்.

Story first published: Tuesday, April 9, 2019, 0:15 [IST]
Other articles published on Apr 9, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+