Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

காமன்வெல்த் கிரிக்கெட் : இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய மகளிர் அணி.. அரையிறுதியில் த்ரில் வெற்றி

பிர்மிங்கம்: காமன்வெல்த் கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி த்ரில் வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.

Recommended Video

Commonwealth Cricket இந்திய மகளிர் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி

இன்று நடைபெற்ற காலிறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவூர் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இந்திய அணி பேட்டிங்

இந்திய அணி பேட்டிங்

இந்திய அணியின் ஓப்பனிங் வீராங்கனைகள் ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷவாலி வர்மா 71 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அதிரடி தொடக்கத்தை கொடுத்தனர். 17 பந்துகளை சந்தித்த ஷவாலி வர்மா 15 ரன்களை மட்டுமே எடுத்து வெளியேறினார். சிறப்பாக விளையாடிய ஸ்மிருதி மந்தனா 32 பந்துகளில் 61 ரன்களை குவித்து வெளியேறினார்.

கடைசி நேர அதிரடி

கடைசி நேர அதிரடி

இதன்பின்னர் வந்த ஜெமியா 44 ரன்களும், கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவூர் 20 ரன்கள் அடிக்க 20 ஓவர்கள் முடிவில் இந்திய மகளிர் அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 164 ரன்களை குவித்தது. எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் 165 ரன்கள் என்பது சுலபமாக விரட்டக்கூடிய இலக்கு தான் என்பதால் ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.

தொடக்கமே ஷாக்

தொடக்கமே ஷாக்

இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. ஓப்பனிங் வீராங்கனை சோபியா டங்க்ளே 19 ரன்களுக்கும், அதன்பின்னர் வந்த ஆலீஸ் கேப்ஸே 13 ரன்களுக்கும் வெளியேறினர். பின்னர் ஜோடி சேர்ந்த டேனியெல்லா வ்யாட் (35) மற்றும் நடாலியா ஸைவர் (41) ரன்கள் அடித்தனர்.

 பயம் தந்த இங்கிலாந்து

பயம் தந்த இங்கிலாந்து

4வது விக்கெட்டிற்கு களமிறங்கிய எமி ஜோன்ஸ் அதிரடி காட்டியதால் இந்தியாவின் வெற்றி கையை விட்டு போகும் நிலை உருவானது. கடைசி 6 பந்துகளில் இங்கிலாந்து அணிக்கு 14 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டதால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. இதுஒருபுறம் இருக்க, இந்திய அணிக்கு பெனால்டியும் கொடுக்கப்பட்டது.

பரபர கட்டம்

பரபர கட்டம்

பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்ட காரணத்திற்காக பவுண்டரி எல்லையில் எனினும் அந்த ஓவரில் இந்திய அணி 9 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்ததால் 4 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மேலும் இறுதிப்போட்டிக்கும் முன்னேறியது. இறுதிப்போட்டி நாளை இரவு நடைபெறவுள்ளது.

Story first published: Saturday, August 6, 2022, 20:03 [IST]
Other articles published on Aug 6, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+