மகளிர் இரட்டையர் பேட்மிண்டன்-ஜூவாலா, அஸ்வினி ஜோடிக்குத் தங்கம்

இன்று நடந்த இறுதிப் போட்டியில் சிங்கப்பூரின் சரி சாந்தி முலியா, யோவோ லீ ஜோடியை 21-16, 21-19 என்ற நேர் செட்களில் இந்திய ஜோடி வீழ்த்தியது.
காமன்வெல்த் பேட்மிண்டன் போட்டியில் இந்தியா தங்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும்.
இன்றைய ஆட்டத்தில் ஜுவாலா, அஸ்வினி ஜோடி அபாரமாக ஆடியது. இருவரும் தாக்குதல் ஆட்டத்தில் குதித்ததால் முதல் நிலை ஜோடியான சிங்கப்பூர் வீராங்கனைகள் திணறிப் போயினர்.
இந்த தங்கத்துடன் இந்தியாவின் தங்க எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் இங்கிலாந்தும், இந்தியாவும் சம அளவில் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளனர். இருப்பினும் மொத்த பதக்க அடிப்படையில் இங்கிலாந்து 2வது இடத்தில் உள்ளது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:42 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications