For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மாஸ்க் போட்டு கலாய்க்கும் லங்கன்ஸ்... உங்க ஊர்ல எவ்வளவு மாசு இருக்கு தெரியுமா?

இலங்கை வீரர்கள் டெல்லியில் இருக்கும் காற்று மாசு குறித்து கிண்டல் செய்து வரும் நிலையில் இலங்கையின் காற்று மாசு குறித்த செய்திகள் வெளியாகி இருக்கிறது

By Shyamsundar

டெல்லி: இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி தற்போது டெல்லியில் நடந்து வருகிறது. டெல்லியில் நிலவும் மோசமான காற்று மாசுபாட்டை இலங்கை வீரர்கள் குற்றச்சாட்டி வருகின்றனர்.

இதன் காரணமாக பலமுறை போட்டியை நிறுத்துவதற்கும் முயற்சி செய்தனர். மேலும் இலங்கை வீரர்களின் இந்த செயல் பல கிரிக்கெட் ரசிகர்களை எரிச்சல் படுத்தியது.

தற்போது இலங்கை தலைநகர் கொழும்பின் காற்று மாசு குறித்து தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த புள்ளிவிவரங்களை வைத்து இலங்கை ரசிகர்களை இந்திய ரசிகர்கள் தோரணம் கட்டி தொங்கவிட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

புகை மயம்

புகை மயம்

டெல்லியில் தற்போது மிகவும் மோசமான அளவிற்கு புகை நிலவி வருகிறது. இந்த புகை காரணமாக அங்கு கிரிக்கெட் விளையாடும் இலங்கை வீரர்கள் அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இலங்கை வீரர்கள் அனைவரும் முகத்தை மாஸ்க்கால் மூடிக்கொண்டு விளையாடினார்கள். இலங்கை அணியின் வீரர்கள் நடுவரிடம் போட்டியை நிறுத்தும்படி அடிக்கடி சண்டையிட்டனர்.

வைரல் சர்ச்சை

வைரல் சர்ச்சை

தற்போது இலங்கை வீரர்களின் இந்த முறையீடு சர்ச்சை ஆகி இருக்கிறது. பலரும் சமூக வலைத்தளங்களில் இலங்கை அணியை கிண்டல் செய்து வருகின்றனர். கோஹ்லிக்கும் இந்திய அணியின் இமாலய இலக்கிற்கும் பயந்தே இலங்கை இப்படி செய்வதாக கூறினார்கள். மேலும் சிறப்பாக நடிக்கும் இலங்கை வீரர்கள் படத்திலும் நடிக்கலாம் என்று கூட கலாய்த்து இருந்தார்கள்.

கொழும்பு எப்படி இருக்கிறது

கொழும்பு எப்படி இருக்கிறது

தற்போது சிலர் ஆதாரங்களுடன் இலங்கை தலைநகர் கொழும்பில் நிலவும் காற்று மாசு குறித்து தகவல் வெளியிட்டு இருக்கின்றனர். அதன்படி கொழும்பின் மொத்த பரப்பளவு 37.31 கிமீ மட்டுமே. டெல்லியின் பரப்பளவு 1,484 கிமீ ஆகும். இந்த சிறிய பரப்பளவு கொண்ட கொழும்பு மிகவும் அதிக அளவில் மாசு அடைந்து இருக்கிறது. கணக்குப்படி கொழும்பின் மாசு அளவு 64 புள்ளிகள் ஆகும். இது அந்த மிகச்சிறிய நகரத்திற்கு மிகவும் அதிகம் ஆகும்.

டெல்லியின் நிலை

டெல்லியின் நிலை

அதேபோல் டெல்லியின் மாசுபட்டு அளவு குறித்தும் கூறப்பட்டு இருக்கிறது. அதில் 88.93 புள்ளிகள் பெற்று டெல்லி அதிகமாக மாசு அடைந்து இருக்கிறது. ஆனால் மிகச்சிறிய பரப்பளவு கொண்ட கொழும்புவுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது இது குறைவாகத்தான் இருக்கிறது. இதன் காரணமாக டெல்லியின் மாசும், கொழும்பின் மாசும் கிட்டத்தட்ட ஒன்றாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

வைரலோ வைரல்

வைரலோ வைரல்

தற்போது இந்த புள்ளி விவரங்களை வைத்து மீண்டும் இலங்கை வீரர்களை இந்திய ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். ஏற்கனவே மைதானத்தில் மோசமான சூழ்நிலை நிலவினால் கண்டிப்பாக விளையாட மாட்டோம் என்று இலங்கை தரப்பு கூறியிருக்கிறது. அதேபோல் இன்றும் மாஸ்க்குடன் இரண்டாவது இன்னிங்ஸ் பவுலிங் போட இலங்கை களம் இறங்கி இருக்கிறது. அவர்களின் இந்த செயல் மிகவும் மோசமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

Story first published: Tuesday, December 5, 2017, 11:17 [IST]
Other articles published on Dec 5, 2017
English summary
Comparison between Delhi and Colombo pollution. It shows that Colombo has literally same pollution rate as Delhi. The comparison has raised after Sri Lankans complaint about Delhi pollution.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+