Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வந்துவிட்டது டி-10 கிரிக்கெட் லீக்... இது அதிரடிக்கு எல்லாம் அதிரடி!

சார்ஜா: முக்கியமான வீரர்கள் பலர் பங்கேற்கும் டி-10 கிரிக்கெட் லீக் தற்போது தொடங்கி இருக்கிறது. இதற்கான தொடக்க விழா நேற்று ஷார்ஜாவில் நடைபெற்றது.

இந்த டி-10 கிரிக்கெட் லீக் தொடரில் நிறைய சுவாரசியமான சம்பவங்கள் நிரம்பி இருக்கிறது. முன்னாள் வீரர்கள் பலர் இந்த போட்டிக்காக மீண்டும் கிரிக்கெட் விளையாட களம் இறங்குகின்றனர்.

நேற்று இந்த போட்டிக்கான துவக்க விழா நடைபெற்றது. இந்த வார இறுதி வரை போட்டிகள் நடைபெறும். இதற்கு மக்கள் தரும் ஆதரவை வைத்து எதிர்காலத்தில் நீண்ட தொடராக நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.

டி-10 கிரிக்கெட் லீக் தொடர்

டி-10 கிரிக்கெட் லீக் தொடர்

தற்போது கிரிக்கெட் உலகில் டி-20 போட்டிகள் மிகவும் பிரபலமாக இருக்கிறது. டி-20 போட்டிகள் வந்த பின் மொத்த கிரிக்கெட் உலகமே மாறியிருக்கிறது. இந்த நிலையில் தற்போது இதில் இன்னும் சில மாற்றங்கள் கொண்டு வரும் வகையில் டி-10 போட்டிகள் நடக்க இருக்கிறது. டி-10 கிரிக்கெட் லீக் தொடர் தற்போது ஐக்கிய அரபு நாடுகளின் சார்ஜாவில் தொடங்கி உள்ளது. இந்த போட்டிகள் டிசம்பர் மாதம் 17ம் தேதி வரை நடைபெறும்.

கலந்து கொள்ளும் நாடுகள்

கலந்து கொள்ளும் நாடுகள்

இந்த டி-10 கிரிக்கெட் லீக் போட்டியில் மொத்தம் ஆறு அணிகள் கலந்து கொள்ள இருக்கிறது. வெவ்வேறு நாடுகளில் இருந்து அணிகள் உருவாக்கப்பட்டு இந்த போட்டி நடக்கும். அதன்படி பெங்கால் டைகர்ஸ், கேரளா கிங்ஸ், பஞ்சாபி லெஜண்ட்ஸ், மாரத்தா அரேபியன்ஸ், பாக்த்துன்ஸ், கொழும்பு லைன்ஸ் ஆகிய அணிகள் கலந்து கொள்ளும்.

வீரர்கள்

வீரர்கள்

இந்த போட்டியில் சில முக்கியமான வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர். சேவாக், குமார் சங்கர்காரா, ஷாஹித் அப்ரிடி, முகமது அமீர், முஸ்தபிர் ரகுமான், பிராவோ, டேரன் சமி, டேவிட் மில்லர் , தமீம் இக்பால், பொல்லார்ட் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். இந்த வீரர்கள் அனைவரும் அதிரடியான ஆட்டக்காரர்கள் என்பதாலும், வெறும் 10 ஓவர்களே நடக்கும் என்பதாலும் இந்த போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திட்டம் என்ன

திட்டம் என்ன

இந்த போட்டிகள் பல எதிர்கால திட்டங்களை மனதில் வைத்து நடத்தப்படுகிறது. இந்த முறை இந்த தொடர் ஒருவாரம் மட்டுமே நடந்தாலும் எதிர்காலத்தில் பெரிய தொடராக நடக்கும். மேலும் ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்டை சேர்க்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த டி10 போட்டிகள் ஒலிம்பிக் தொடரில் இடம்பெற நல்ல வாய்ப்பாக இருக்கும் என்றும் கிரிக்கெட் வீரர்கள் கூறியுள்ளனர்.

Story first published: Friday, December 15, 2017, 10:38 [IST]
Other articles published on Dec 15, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+